Saturday, September 26, 2015

அன்பே சிவம்

அன்பே சிவம்

அன்பே சிவம் என்று ஆன்றோர்
கூறுகின்றார்.

தியாகம் என்னும் பண்பே
அவன்  குணமென்றார்

அதனால்தான் அவன் தாளை
வணங்குகிறோம்

அவன் அருளை பெற
முயல்கின்றோம்.

நிலையில்லாது திரியும்
மனதைக் கொண்டு சிலையாய்
நிற்கும் அவனில் அவனைக்
காண துடிக்கின்றோம்

அவனே உயிர்களாய் நம் எதிரே
வந்து நின்றாலும் விழியிருந்தும்

அடையாளம்  காண இயலாது
தவிக்கின்றோம்.

கைலாய மலைக்குள்
அவன் உறைகின்றான்

அருணை மலையாக நம்முன்
காட்சி தருகின்றான்.

வேங்கட மலையில் வெண்பட்டு
பீதாம்பரனாக நம் முன்னே நின்று
அருள்கின்றான்.

பழனியிலே நீ தேடும் பழம்
நான்தான் என்று நமக்கு
உணர்த்துகின்றான்.

எல்லாம் கண்டும் கேட்டும்
எதையும் அறிய இயலா மூடர்களாய்
காலத்தை கழிக்கின்றோம்
காலனுக்குள் மறைகின்றோம்.

இதயத்தில் அன்பிருந்தால் போதும் 
எல்லா உயிர்களையும் நேசித்தால் போதும் 

இருப்பதை பிறருடன் பகிர்ந்து உண்டால் போதும் 
வாக்காலும் உடலாலும் சக உயிர்களுக்கு 
தீங்கிழைக்காமல் இருந்தால் போதும் 
நம்மை கடைத்தேற்ற 
தானே வெளிப்படுவான் 
அவன்  நம் முன்னே. 



No comments:

Post a Comment