Thursday, May 16, 2013

ஆன்ம விடுதலை.


ஆன்ம விடுதலை. 




எல்லோருக்கும் இறைவன் ஒருவனே 

ஆத்திகர்கள் தெய்வம் என்கிறார்கள்
நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள்

மொத்தத்தில் ஒரு சக்தி ஒன்றுள்ளது
அதுதான் அனைத்தையும் செய்கிறது,
அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது

அளவுக்குமீறி ஆட்டம் போட்டால்
தலையை தட்டி அடக்கி வைக்கிறது

அப்படியும் அடங்காவிட்டால்
அடியோடு அழித்துவிடுகிறது.

இந்த உலகம் தோன்றியநாள்
முதற்கொண்டு இந்த செயல்கள்
நடந்துகொண்டு வருகின்றன.
இதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த உண்மையை அறிந்துகொண்ட ஞானிகள் ,
மற்றும்,யோகிகள் சித்தர்கள் அந்த சக்திக்கு
அடிபணிந்து வணங்கி இந்த உலகத்தில்
மன திருப்தியோடு வாழ்ந்து மீண்டும்
அந்த சக்தியில் கலந்துவிட்டனர்.

பலர் இறைவனின் ஆணைப்படி
அருவமாக இருந்துகொண்டு
மனித குலத்திற்கு உண்மைகளை எடுத்துசொல்லி
அவர்களை நல்லதொரு பாதையில்
செலுத்தி கொண்டு வருகின்றனர்.

ஆனால் பெரும்பாலான மனிதர்கள்
 இந்த உண்மையை தங்கள் அகந்தையினால்
 ஏற்றுக்கொள்வதுமில்லை

அதைஅறிந்துகொள்ளவோ அல்லது
புரிந்துகொள்ளவோ  ஆர்வம் காட்டுவதில்லை.

அவர்கள் உலக மோகத்திலும்
போகத்திலும் மூழ்கியே இன்பதுன்பங்களில் சிக்கி அல்லல்படுக்கொண்டிருக்கின்றனர்.

சிலர் இந்த உண்மையை அறிந்துகொண்டாலும்
இந்த சிக்கலிலிருந்து வெளிவர உறுதியான
நடவடிக்கைகள் எடுக்கும் அளவிற்கு
மனஉறுதியும் விடாமுயற்சியும் இருப்பதில்லை.

ஒரு சிறு தடை ஏற்பட்டாலும்
அவர்கள் சாதனைகளை தொடர்வதில்லை.

இறைவனே பலமுறை அவதாரம் செய்தும்,
தன் அடியார்களை உலகிற்கு அனுப்பி மனித குலம்
உண்மையை உணர்ந்து உய்வதற்கு வழிகாட்டியும்
அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு
முன்னேறியவர்கள் வெகு சிலரே.

இறைவன் வைரக்கற்களை
அளிக்க காத்திருக்கும்போது
அவர்கள் கூழாங்கற்களையும்
,கண்ணாடி கற்களையும் யாசித்து
 பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்து
மீண்டும் பிறவி என்னும் குழியில்
விழுந்து தத்தளிக்கின்றனர்

இறைவனை அடைய எவ்வளவோ
கடினமான சாதைனைகள் இருந்தும்
அவைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு
அவன் நாமத்தை ஜெபிப்பதே
எளிதான சாதனையாக இருப்பதை
உணர்ந்துகொண்டு அனைவரும்
ஆன்ம விடுதலை பெறமுயற்சிக்க வேண்டும்.

8 comments:

  1. எளிதான வழியை விளக்கமாக சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இறைவன் வைரக்கற்களை
    அளிக்க காத்திருக்கும்போது
    அவர்கள் கூழாங்கற்களையும்
    ,கண்ணாடி கற்களையும் யாசித்து
    பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்து
    மீண்டும் பிறவி என்னும் குழியில்
    விழுந்து தத்தளிக்கின்றனர்...

    நிதர்சனமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. இறைவனை அடைய எவ்வளவோ
    கடினமான சாதைனைகள் இருந்தும்
    அவைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு
    அவன் நாமத்தை ஜெபிப்பதே
    எளிதான சாதனையாக இருப்பதை
    உணர்ந்துகொண்டு அனைவரும்
    ஆன்ம விடுதலை பெறமுயற்சிக்க வேண்டும்.

    ramarasam தந்த ரசமான சத்தான முயற்சிக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையின் நோக்கத்தை
      பிறர் அறிய வெளிப்படுத்தியுள்ளீர்கள்
      நன்றி
      பாராட்டுகள்

      Delete
  4. அருமையான செய்திகளை எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. இறைவன் வைரக்கற்களை
    அளிக்க காத்திருக்கும்போது
    அவர்கள் கூழாங்கற்களையும்
    ,கண்ணாடி கற்களையும் யாசித்து
    பெற்றுக்கொண்டு திருப்தி அடைந்து
    மீண்டும் பிறவி என்னும் குழியில்
    விழுந்து தத்தளிக்கின்றனர்
    //உண்மைதான்!// நல்லதொரு பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete