Monday, September 21, 2015

எல்லாம் கண்ணனே !


எல்லாம் கண்ணனே !



Metal engraving-Sri Guruvayurappan-by  T.R.Pattabiraman 

எல்லாம் கண்ணனே
எனக்கு எல்லாம் கண்ணனே (எல்லாம்)

தொல்லை மிகு இவ்வுலகில்
என்றும் துணை அவன் நாமமே (எல்லாம்)

தாயுமாய் தந்தையுமாய்
தோழனாய் தோழியுமாய்

குருவுமாய் சீடனுமாய்
நம்முடனே என்றும் இருப்பவன்

நம்பும் அடியவரின் குரல் கேட்டு
நல்லதோர் பாதையை காட்டுபவன் (எல்லாம்)

குழந்தையாய்
அவன் வடிவெடுத்தான்

குற்றம்புரிபவரை
அழித்திட முடிவெடுத்தான்

பாரத போரில் சங்கெடுத்தான்

பாரில் வாழும் மக்கள் மனதில்
குழப்பங்கள் போக்கிடவே

பகவத் கீதை என்னும்
ஞான நூல் தந்தான்  (எல்லாம்)

இவ்வுலக வாழ்வு இன்புறவே
இகபர சுகம் எல்லாம் அடைந்திடவே

அழகிய கண்ணனின்
வடிவை வணங்கிடுவோம்

அவன் காட்டிய பாதையில்
நடந்திடுவோம்  (இவ்வுலக) (எல்லாம்)

உள்ளத்தில் மாறா
இன்பம் நிலைத்திடவே

உலகத்து மாந்தர் மகிழ்ந்திடவே

தீமைகள் எல்லாம் தொலைந்திடவே

சொல்லுவோம் அவன் நாமம் என்றென்றும் (உள்ளத்தில்) (எல்லாம்)




5 comments:

  1. கண்ணன் நம் தோழன், குரு.

    ReplyDelete
    Replies
    1. எந்த குரு தோழன் போல் நடந்து கொள்கிறாரோ அவர் கண்ணனின் வடிவமே

      Delete
  2. கண்ணனைக் கண்ணாரக் கண்டேன் உங்கள் பாடல் வழியாக!
    சேதுராமன், குடந்தை

    ReplyDelete
    Replies
    1. பல ஆண்டுகளுக்கு முன் கண்ட உன்னை இப்போது என் மனக்கண் முன் காண்கின்றேன் உன் கருத்துரை மூலம் நன்றி. .

      Delete
  3. கண்ணனைக் கண்ணாரக் கண்டேன் உங்கள் பாடல் வழியாக!
    சேதுராமன், குடந்தை

    ReplyDelete