Monday, March 31, 2014

இறைவனை எங்கு வைத்து வழிபடவேண்டும்?

இறைவனை எங்கு 
வைத்து வழிபடவேண்டும்?

இறைவன் எல்லா இடத்திலும்,
 எல்லா பொருளிலும்
நிறைந்துள்ளான்



ஆத்மராமன்

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

அவன் இந்த இடத்தில்  இருக்கிறான்
இந்த இடத்தில ,இந்த பொருளில்
 இல்லை என்று கூற முடியாது.

எப்படி என்றால் ,மின்சக்தி  பாயும்
 ஒரு கம்பியை எங்கு தொட்டாலும்
அதில் மின்சக்தி இருக்கும்.

அதை தொட்டால் அதிர்ச்சி ஏற்படும்.
அதுவே நாம் தாங்கக்கூடிய அளவை மிஞ்சினால்
 நம் உடல் எரிந்து கருகிவிடும் அல்லது.  சாம்பலாகிவிடும்.

ஒவ்வொரு உயிரிலும் இறைவனின் ஒரு அணு உள்ளது
அதுதான் நம்மையெல்லாம் இயங்கவும் செய்கிறது
இயங்காமல் இருக்கவும் செய்விக்கிறது .
அந்த அணுவே ஆன்மா என்றும்
அது கோடி சூரிய பிரகாசம் எ
ன்று சொல்லப்படுகிறது

அது வெளிப்படவேண்டுமேன்றால்
அதன் மேல் படிந்துள்ள அழுக்குகளை
 எல்லாம் அகற்றவேண்டும்.
அகற்றினால் அது பிரகாசிக்கும்.

கதிரவனை மறைக்கும் மேகங்கள்
அகன்றால் ஒளி தானே வீசுவதுபோல்
நம் மன மயக்கங்கள் அகலவேண்டும்
 நமக்குள் உள்ள ஆன்ம ஸ்வரூபம்  ஒளி  விடும்

அதற்க்கு நாம் புலன்களை கடந்து 
எல்லா நினைவுகளையும் ஒழித்து ,
அவன் நினைவாக மட்டும் நிலைத்து 
நின்றால் அவன் வெளிப்படுவான் 

இறைவன் ஒளி வடிவானவன்,
நம்முடைய புலன்கள்
அந்த ஒளியைத் தாங்கும் சக்தி கிடையாது.

ஒரு டார்ச் விளக்கிலிருந்து வரும்  ஒளியையே நம்மால்  தாங்க முடியவில்லை. அதை உற்றுப் பார்த்தல் நம் பார்வையே போய்விடுகிறது. அதன் ஒளியில் உள்ள நிறங்கள் நம் கண்ணை  விட்டு சில நிமிடங்கள் மறைவதில்லை.

நாம் தினமும் காணும் கதிரவன் ஒளியையே
 நம்மால் காண முடியவில்லை.
அவனைப் படைத்த பரம்பொருள்
எவ்வளவு ஒளி  மிக்கதாக இருக்கும்.

நமக்குள்ள அற்ப அறிவைக் கொண்டு
அதை கற்பனை செய்து பார்க்கக் கூட இயலாது.

மழைக்காலத்தில் காண நேரத்தில்
தோன்றி மறையும் மின்னால் கீற்றைக்
காணக் கூட  நமக்கு சக்தி கிடையாது.


அதுபோல்தான் அவன் ஒலி வடிவானவன்.
நம்முடைய புலன்கள் ஒலி  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே சென்றாலும் நமக்கு கேட்காது .குறிப்பிட்ட அளவிற்கு மேலே சென்றால் நமக்கு கேட்கும் சக்தியே  போய்விடும்.

புலன்களின் பின்னால் எபோதும்
ஓடிக்கொண்டிருக்கும் மனதினால்
இறைவனை அடையமுடியாது.

கணத்திற்குகணம் மாறிக்கொண்டிருக்கும்
மனதினால் இறைவனை சிந்தனை செய்ய முடியாது.

வடிவங்களையே இறைவன் என்றும் ,
ஒவ்வொரு வடிவமும் தனி தனி கடவுள் என்றும் நம்பிக்கொண்டிருக்கும் மனதினால் ,
பல லட்சக்கணக்கான நினைவுகளால்
சிதறிக் கிடக்கும் மனதினால் இறைவனைக் காண முடியாது.

இறைவனை அடைய
என்னதான் செய்யவேண்டும்?

அந்தஇறைவனிடமேதான்  அதற்குரிய சக்தியை
தருமாறு பிரார்த்தனை செய்யவேண்டும்.

நம்முடைய மனத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யாமல்
 நம்முடைய் புத்தியில் அவனை வைத்து பிரார்த்தனை செய்தால்  அவன் நமக்கு வழி காட்டுவான்.

திருமூலர் விநாயகப் பெருமானை தன்னுடைய புத்தியில் (இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள புந்தியில்) வைத்து வேண்டுகிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் அரங்கப் பெருமானே ,புலன் வழியில் சிதறிப் போன என் மனதினால் உன்னை நான் துதிக்க  இயலவில்லை. இவன் பட்ட துன்பங்கள் போதும் என்று பெரிது மனது பண்ணி என்னுடைய புத்தியில் நீயே புகுந்து அருள் செய்தாயே என்று திருமாலையில் பாடி புகழ்கிறார்.

நாமும் இறைவனை நம்முடைய புந்தியில்
இறைவனை நினைத்து நமக்கு
அருள் செய்ய வேண்டுவோம். 

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் 



ஞானத்தின் பலன் (2) 

உண்மையான சாதகன்
பிறரை மகிழ்ச்சி  அடையச் செய்கிறான்

தேவைப்படுவோருக்கு உதவுகிறான்
நோயாளி குணமடைய உதவுகிறான்
துன்பப்படுவோரின் துயர் போக உதவுகிறான்

பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஆறுதல் கூறுகிறான்

விரக்தி அடைந்தவர்களின் வேதனையைப் போக்கி
அவர்கள் நலம் பெறச் செய்கிறான்

ஏழைகளுக்கும்
வறியோர்களுக்கும் தொண்டு செய்

பெயர் புகழை விட்டுவிடு
தற்பெருமை கொள்ளாதே

தொண்டு செய்.
அன்பு காட்டு
தானம் செய்

ஒளி தரும் நகரை தரிசிக்கும்
யாத்ரீகராகப் பயணம் செய்

அகந்தையைக் கொன்றுவிடு .

துன்பப்படும் மனித குலத்திற்கு
தொண்டு செய் ஏழைகளுக்கும் துன்பப்படுவோருக்கும்
உதவி செய்வதற்காக உனது பணம் மற்றும் நேரம்
மற்றும் சக்தியைத் தியாகம் செய்

இது உனக்கு முக்தியையும்
விடுதலையையும் அளிக்கும்

கடமையை கடமைக்காகவே
செய்ய வேண்டும்.

கடமையைச் செய்ய பிறரிடம்
எதையும் எதிர்பார்க்கக்கூடாது

இதுதான் நல்வாழ்க்கைமற்றும்
அறிவுபூர்வமான வாழ்க்கையின் சட்டம்

இன்னும் வரும். 

கேட்ட வரத்தை தருவாயா? வர சித்தி விநாயகனே !





கேட்ட வரத்தை தருவாயா?
வர சித்தி விநாயகனே !



எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதில் சலனமில்லாமல்
மதியிலிருளே தோன்றாமல்
நினைக்கும்போது நின்
மவுன நிலை வந்திட
நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம்
நூறு வயதிவையும்
தர நீ கடவாயே .
என்றான்  பாரதி

பாரதி கேட்டான் நீ
கொடுக்கவில்லை.

நாங்கள் கேட்கிறோம்
எங்களுக்காகவாவது அவன்
கேட்ட வரத்தை தருவாயா?
வர சித்தி விநாயகனே !





Sunday, March 30, 2014

கலங்காதிரு மனமே !

கலங்காதிரு மனமே !

கலங்காதிரு மனமே
உன்னை வாட்டி வதைக்கும்
கவலைகளைக் கண்டு
கலங்காதிரு மனமே

கவலைகள் எல்லாம்
கனவுகள் போல்
காணாமல்போய் விடும்
மறு கணமே

நம் வாழ்வில் கண்களில்
நீரை வரவழைக்கும்
இன்பம் துன்பமும் இரண்டும்
ஒன்றேதான் என்பதை உணர்ந்து
மனம் அமைதி கொள்வாய் தினமே

கோடை வெயிலில்
கதிரவனை மறைக்கும் கார்முகில்
இன்பம் தரும் அப்போது


முழு நிலவினை மறைக்கும்
கரு மேகம் பொழுதை இருளாக்கி
துன்பம் தரும் அப்போது



நிலையான கதிரவனை
மறைக்கும் நிலையற்ற கார்முகிலும்
முழு நிலவை மறைக்கும்
காற்றால் கலைந்துபோகும் கருமுகிலும்
ஒன்றேதான் என்ற உண்மையைபோல்
இன்பமும் துன்பமும் நிலையல்ல
என்பதை  உணர்ந்துகொள் மனமே

மறைக்கும் முகிலுக்கு மேலே
ஒளி  வீசும் கதிரவனும், குளிர் நிலவும்
நிலையாய் நின்று இன்பம் தருவது





அதுபோல் நம் மனதிற்கு மேலே
நிலையாய் இதயக் குகையில்
கோயில் கொண்டு அருள்பவன்
கண்ணன் என்னும் கருந்தெய்வம்
என்பதை உணர்ந்திடுவாய்
என்றும் மாறா மகிழ்ச்சியில்
திளைத்திடுவாய்

படங்கள்-நன்றி-கூகிள்


Saturday, March 29, 2014

ஆசைதான் பிறவிக்கு காரணம்

ஆசைதான் பிறவிக்கு காரணம்


                                                         Metal foil art-T.R.Patabiraman 

ஆசைதான் பிறவிக்கு காரணம்

ஆசைகள் முழுவதும் 
நீங்கிவிட்டால் மறுபிறவி இல்லை

ஒவ்வொரு உயிரும் நிறைவேறாத 
ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்காக
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன

ஒவ்வொரு பிறவியிலும் 
புதியதாக ஆசைகளை பற்றிகொள்கின்றன

ஆசைகளை நிறைவேற தடைகள் உண்டாகும்போது
கோபம் உண்டாகி பாவ செயல்களில் ஈடுபட்டு
தொடர்ந்து துன்பத்தில் மாட்டிகொண்டு தவிக்கின்றன

முடிவே இல்லாத இந்த சுழலில் 
இருந்து தப்புவதற்கு வழி
இறைவனை சரணடைதலே ஆகும்.

ஆனால் அதற்கு மனம் 
ஒத்துழைக்க வேண்டும்.
உடல் ஒத்துழைக்கவேண்டும்

மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
ஆசைகள் படிப்படியாக குறைந்து 
மனம் அமைதியடையும்போது
மனம் ஆன்மாவை நோக்கி திரும்பும்.

ஆன்மாவை அறிந்துகொண்டால்
இந்த பிறப்பு இறப்பு வளையத்திலிருந்து 
விடுபடும் வழி புலனாகும்

மிக சுலபமான வழி இவ்வுலக 
காரியங்களை செய்துகொண்டே
பிறருக்கு கேடு நினைக்காமல் 
துன்பம் விளைவிக்காமல்
ராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தால் போதும்.
நிச்சயம் வழி பிறக்கும்.

ஸ்ரீ சீதாபதியே சிந்தனை செய்வாய் மனமே!


ஸ்ரீ சீதாபதியே சிந்தனை செய்வாய் மனமே!




அண்டர் குலத்திற்கு அதிபதி
அசுரர் ராக்கதரை அழித்தொழித்த பதி

குளிர் நிலவென பிரகாசிக்கும் முழு மதி
அன்னை சீதையின்உள்ளம்  கவர்ந்த சீதாபதி

அழகே வடிவெடுத்துவந்த சுந்தர ஹனுமான்
போற்றி துதித்த  ரகுபதி

அடியவர்கள் அகமகிழ்ந்து போற்றும்
ஆனந்த பூபதி

உரைக்க உரைக்க இன்பம் தரும்
ராம நாமம் பெயர் சூடிய நவநிதி

பல்லுயிரையும் பரிவோடு காத்து
பரமானந்தம் அளித்த பத்மநிதி

ராம ராம என்று சொல்ல
மனதில் தானே வந்தமையும் நிம்மதி



Friday, March 28, 2014

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் 



ஞானத்தின் பலன் (1)

ஞானம் பிறக்கும்போது
அன்பு மலருகிறது

உண்மை ஞானம் பிரபஞ்ச
அன்பிலிருந்து பிரிக்கமுடியாது

அன்பை  செயலில்
வெளிப்படுத்துவது தொண்டு ஆகும்

அன்பும் தொண்டும்
பிரிக்கமுடியாதவை

அன்பு அஹிம்சையின் வெளிப்பாடு
அன்பின்  பயனாகத் தொண்டு திகழ்கிறது

துன்பப்படும் மனிதர்களுக்கு
தொண்டு செய்வதே
அனைத்து மதங்களின்
அடிப்படைக் கொள்கையாக அமைந்திருக்கிறது

மனித குலத்திற்குத் தொண்டு செய்வதை விட
சிறந்த குணம் வேறில்லை

மனித குலத்திற்கு நலம் சேர்ப்பவன் ,
மனிதருள் சிறந்த மனிதன் ஏழையிடத்திலும் ,
ஆடைக்கு வழியின்றி அவதிப்படுபவனிடத்திலும்
அடக்குமுறைக்கு உள்ளாகி துன்பப்படுபவனிடத்திலும்
நோயால் வேதனைப்படுபவனிடத்திலும் ,
ஆதரவற்றவனிடத்திலும்
கதியற்றவனிடத்திலும் 
கடவுளைக் கண்டு வழிபட
முதலில் கற்றுக்கொள்.

உண்மையான ஆன்மீக வாழ்க்கையின்
அடையாளம் ஏழைக்குத் தொண்டு செய்வதுதான்

இன்னும் வரும் 

இறைவன் எங்கிருக்கிறார்?

இறைவன் எங்கிருக்கிறார்?

இறைவன் எங்கிருக்கிறார்?

சிலர் சூரிய பகவான்தான் கண் கண்ட கடவுள் 
அவனை மட்டும் வணங்கினால் போதும் 
என்பவர்களும் உண்டு   



                                                                                     ஓவியம்.தி.ரா. பட்டாபிராமன்.

சங்கரர் சொல்கிறார்,
நீயே கடவுள்

ராமானுஜர் சொல்கிறார் 
நீ பகவானுக்கு சரீரம்,
அவனிடம் பக்தி பண்ணு என்கிறார்

மத்வர் சொல்லுகிறார் பகவான் வேறு நீ வேறு
நீ அவனுக்கு தொண்டு செய்பவன் மட்டுமே

சதாசிவ ப்ரம்மேந்திரர் சொல்லுகிறார்
எனக்கு எல்லாம் ப்ரம்மாமாக காட்சியளிக்கிறது

ராமதாசர் சொல்கிறார் 
இந்த அண்டமனைத்தும் ராம மயம்
















கண்ண பரமாத்மா சொல்கிறார் 
காண்பதனைத்தும் நானே ,
அதன் உள்ளிருந்து இயக்குவதும் நானே என்கிறார்

பொதுவாக எது எப்படி இருந்தாலும் 
அனைவரும் இறைவன் ஆலயங்களில்
உறைந்து அருள் செய்வதாக நம்புகின்றனர்.

அங்கு சென்று வழிபாடு என்ற பெயரில் 
எதையோ நினைந்து,எல்லோரும் 
செய்வதை தானும் செய்து விட்டு
தங்கள் ஆன்மீக கடமை முடிந்துவிட்டதாக 
திருப்திபட்டு கொள்கின்றனர்

சிலர் கோயில்களுக்கே செல்வதில்லை.
ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம் , குல தெய்வம், 
என விரதம் மேற்கொள்ள சில தெய்வங்கள் என 
பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

இறைவன் எல்லா இடத்திலும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதாக வேதங்கள் சொல்கின்றனவே ,ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆன்மீக பிரசாரகர்களை கேட்டால் ஒரு உதாரணம் சொல்கின்றனர்

நமக்கு பால் வேண்டுமென்றால் பசுவின் வாலையோ அல்லது கொம்பையோ பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா ? 
அல்லது அதன் மடியின் காம்புகளை பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா என்று கேட்கின்றனர்.

இறைவனின் சக்தி எல்லா இடத்திலும் நிறைந்திருந்தாலும் கோயிலில் பல ஆகம வழிமுறைகளால்  அங்கு அதிக அளவில் சேமித்து வைக்கபட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

தன்னிடம் கடவுள் உள்ளதை உணர்ந்த ஆத்ம ஞானிகள் எங்கும் செல்வதில்லை.

அவர்களுக்கு எதுவும் தேவையில்லை

சராசரி மனிதனுக்கு 
தேவையில்லாமல் எதுவும் இல்லை

அதனால் அவன் தேவைகள் நிறைவேறும்வரை 
ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றான்

எல்லாம் உண்மையே .

அவரவர்களின் ஆன்மீக முதிர்ச்சிக்கேற்ப 
 இறைவனை அடையும் வழியை
தேர்ந்தெடுத்து கொள்வது 
அவரவர் கையில்தான் உள்ளது

மரணம் வரும் நேரத்தில்?

மரணம் வரும் நேரத்தில்?

மரணம் வரும் தருவாயில் சங்கரா ,சங்கரா 
என்று சொன்னால் சங்கரன் வருவானா? 
என்று சொல்ல கேட்டிருக்கலாம்.

[Image1]

படம்-நன்றி-கூகுள் 


ஆனால் மரணம் வரும் நேரத்தில் 
சங்கரா,சங்கரா என்று சொல்ல முடியுமா? 
என்பதுதான் கேள்வி.

காரணம் என்னவென்றால் மரணம் எப்படி வரும்,
எப்போது வரும், எந்த வடிவில் வரும்,
விழித்திருக்கும்போது போது வருமா,அல்லது 
தூங்கும்போது வருமா ,அல்லது 
மரணம் வரும்போது நமக்கு சுயநினைவு இருக்குமா 
போன்ற கேள்விகளுக்கு 
விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

விடை நிச்சயம் கிடைக்காது

எனவேதான் இறைவன் நாமத்தை 
எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

இயல்பாக் நாம் தெரிந்தோ தெரியாமலோ 
மூச்சு விடுவதுபோல் இறைநாமத்தை 
சொல்லிகொண்டிருக்கவேண்டும்

அப்போதுதான் உயிர் பிரியும்போது 
நம் மனது இறைவனை பற்றிகொண்டிருக்கும்

பகவத் கீதையில் உயிர் பிரியும் போது
 நம் மனதில் எந்த எண்ணம் உறுதியாக உள்ளதோ 
அதுவே நம் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும்.
என்று சொல்லபட்டிருக்கிறது.

அதை கருத்தில்கொண்டு நாம் எந்த வேலை 
செய்துகொண்டிருந்தாலும் 
சொல்வதற்கு எளிதான் ராம நாமத்தை 
சொல்லிகொண்டிருந்தால் இவ்வுலகில்
மீண்டும் பிறந்து துன்பபடவேண்டியதில்லை.



சங்கரா  சங்கரா என்று  
சொல்லிக்கொண்டிருந்தாலும் போதும் 
அவன் மரிப்பவரின் காதில் ராம நாமத்தை
நினைவு தப்பும் முன் 
உபதேசம் செய்துவிடுவான். 

ஏழுமாமலை வாசா


ஏழுமாமலை வாசா

வணங்குவோர் வாழ்வில் வளம் சேர்க்கும்
நலம் தரும் ஏழுமலையானையும்
பத்மாவதி தாயாரையும் தரிசிப்பதால்
கிடைக்கும் இன்பம் சொல்லில் அடங்காது

1960 ஆம் ஆண்டில் கிடைத்த கீழே கண்டுள்ள
படங்களை கணினி மூலம்
மெருகேற்றி அழகுபடுத்தினேன்

54 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் தாயார் படம் 
எப்படி இருக்கும் ?
இப்படிதான் இருந்தது 






ஏழுமாமலை வாசா
ஒ வெங்கடேஸ்வரா
கண்ணார உனைக் காண கருணை செய்யுமையா
என்ற பி.பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடலை கேட்டு மனம் உருகாதவர்கள் இருக்கமுடியாது.

ராமாயணத்தில் தசரதனும் கைகேயியும்

ராமாயணத்தில் தசரதனும் 
கைகேயியும்

இராமாயண கதை ஒரு. புறம் இருக்கட்டும்.
அது காட்டும் சில நல்ல கருத்துக்களை
சிந்தை செய்வோம்.



ராமாயணம் படிப்போர் கைகேயி
பாத்திரத்தை வெறுப்போடு பார்க்கிறார்கள்.

காரணம் அவள் தன் மகன் பரதன்
அரசாளவேண்டுமேன்று நினைக்கிறாள்
ஏன் அவ்வாறு நினைக்கிறாள்?


ராமன் முடிசூடினால் அவளும் அவள் மகனும்
அவனுக்கு அடிமைகளாக ஆகிவிடுவார்கள்  என்று
கூனி அவளுக்கு அறிவுரை கூறுகிறாள்


பெண்கள் பேதலிக்கும் புத்தி உடையவர்கள்
நல்ல மனம் உடைய கைகேயியின் மனதை
பிள்ளைப் பாசம் கெடுத்துவிட்டது.

ஒரு குடம் நல்ல பாலைக் கெடுக்க
ஒரு சொட்டு நஞ்சு போதும்.

பல நூறு ஆண்டுகள் வளர்ந்த மரத்தை வெட்ட
ஒரு கோடரி போதும்

சிறுவயது முதலே இணை பிரியாமல்
இருந்த நண்பர்கள் பிரிவதற்கு
ஒரு அற்ப காரணமே போதும்.
நண்பர்கள் பகைவர்களாகிவிடுவார்கள்.

அதனால்தான் ஒரு மனிதன் சத்சங்கத்தில்
நித்தியமாக, நிரந்தரமாக் தன்னை
இணைத்துக்கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு தீயவர்களோடு
இணைந்தால் நம்முடைய நல்ல பண்புகளும்,
மன அமைதியும் சர்வ நாசமாகிவிடும்.

தீயாரை காண்பதும் தீதே என்கிறார்கள்.
அப்படி இருக்க தீய சிந்தனை கொண்ட
மந்தரையை தன்னோடு  வைத்துக்கொண்டிருந்த
கைகேயின் மனம் மாசடைந்ததில்
வியப்பு ஒன்றுமில்லை.

ஆதி சங்கரர் சத்சங்கத்தில் இணைந்தால்தான்
நம்மை துன்பத்தில் சிக்கவைத்து  காமம் , மோகம்
முதலிய தீய குணங்கள் நம்மை பற்றாது என்கிறார்.

மோகம் தொலைந்தால்தான் இறைவனின்
உண்மையான தத்துவம் புரியும்.
மனம் அமைதி அடையும்.

அப்போதுதான்

ஜீவன் விடுதலை பெற முடியும்

நல்லநலம் தரும்  சத்சங்கத்தில் இணைவோம்.
நல்ல கதியை அடைவோம்.




ராம நாமத்தை இரவும் பகலும்
இடைவிடாது ஜெபிப்பதே
நல்ல சத்சங்கம்