Tuesday, March 25, 2014

வேள்வியில் பிறந்த கேள்விகள்


வேள்வியில் பிறந்த கேள்விகள் 

பாவத்தை தொலைப்பதற்கும் 
புண்ணியத்தைதேடுவதற்கும் 
வேண்டிய பலன்களை அடைவதற்கும் 
முற்காலத்தில் வேள்விகள் செய்யப்பட்டன 

ராமாயணத்தில் தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்தான்
புத்திரர்களை பெற வேண்டி 

இதைப்போன்று ராஜா சூய யாகம், அஸ்வமேத யாகம் 
என்று ஏராளமான யாகங்கள் உள்ளது  அனைவருக்கும் தெரியும். 

தெய்வங்களைதிருப்திபடுத்தி நன்மைகளை
அடைவதற்கு ஹோமங்கள் உதவுகின்றன. 


அதைப்போன்றுதான்
 கத உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. 

வஜஷ்ராவசர் என்பவர் ஒரு யாகம்  செய்கிறார். 
பொதுவாக யாகத்தின் போது 
நிறைய அன்னதானம் மற்றும் யார் எதைக் கேட்கிறார்களோ
அதையெல்லாம் தானம் செய்யவேண்டும். 
அப்படி கொடுக்கின்ற பொருள் அவர்களுக்கு
 பயன்படுபவைகளாக இருக்கவேண்டும்
அப்போதுதான் அவர் செய்யும்யாகத்திற்குரிய 
 பலன்களை அடைமுடியும். 

 வஜஷ்ராவசருக்கு ஒரு மகன் இருந்தான்
அவன் பெயர் நசிகேதஸ் 

அவன் தன் தந்தை தானம் செய்யும்
பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தான் 

அவன் தந்தை பசுக்களை தானம் செய்வதைப் பார்த்தான் 
அவைகள்  வயதாகி, உடல் மெலிந்து,
 இறக்கும் தருவாயில்இருந்தததைக் கண்டான் 
அவைகளால் அந்த தானம் பெறுபவருக்கு
 ஒரு பயனும் இல்லை. 

அவைகள்எதற்கும் பயன்படாது. 

அவனுக்கு சிறு வயதிலேயே தெரிந்திருந்த்தது
தானம் செய்யப்படும் பொருள்  பிறருக்கு
பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்று. 

தானம் அளிக்கப்படும் பசுமாடுகள் கன்றுகளுடனோ 
அல்லது ,பால் சுரக்கும் நிலையிலோ அளிக்கப்பட்டால்
பெறுபவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று நினைத்தான். 

அவ்வாறு இல்லாத நிலையில் தானம்
கொடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்று அவன் கருதினான் 

இந்த சிந்தனையே அவன் மனதை
அல்லும் பகலும் வாட்டியது. 

தன்னையே மற்றவருக்கு கொடுத்துவிட்டால்
 தான் அவர்களுக்கு பயனுடையதாக இருக்கலாம் என்று கருதினான்.

ஒருநாள் தன் தந்தையிடம் சென்றான்.

தந்தை மகனே உனக்கு என்ன வேண்டும்?
சொல் என்றார். 

தந்தையே எல்லாவற்றையும் தானம் செய்கிறீர்களே
என்னை யாருக்கு தானம் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டான்.

வஜஷ்ராவசருக்கு மகன் கேட்ட இந்த கேள்வியே பிடிக்கவில்லை.

ஆனால் திரும்ப திரும்ப இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தான்.
தன்னை  பிறருக்கு தானமாக அளித்தால் தன் தந்தையின்
யாகம் முழுமை பெரும் என்ற நல்லெண்ணத்தில் 
அவன் திரும்ப திரும்ப இந்த  கேள்வியை அவன் கேட்டான்

அவன் தந்தை கோபத்தின் உச்ச கட்டத்தில் இருந்தான். 

உடனே அவன் சொன்னான்,
உன்னை யமனுக்குஅளிக்கப்போகிறேன்
என்று சொல்லிவிட்டான்


உடனே யம தூதர்கள் அங்கு வந்துவிட்டார்கள்
நசிகேதசை அழைத்து செல்ல. 

அப்புறம் என்ன நடந்தது.?

இன்னும் வரும். 

4 comments:

  1. அவசரப்பட்டு பேசக்கூடாது என்பது இதுதான் போலும்! நசிகேதஸ் மூலம் செய்தி ஒன்று உலகத்துக்கு வரவேண்டுமென்று விதி இருந்தால் அவர்தான் என்ன செய்வார் பாவம்!

    ReplyDelete
    Replies
    1. மரணத்தை தாண்டும் உபாயம் அவனால் அன்றோ இந்த உலகிற்க்குகிடைத்தது

      Delete
  2. என்ன நடந்தது என்று அறிய அடுத்த பகிர்வுக்கு செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவு இன்று வெளியிட்டுவிட்டேன். உங்களுக்காக

      Delete