Sunday, March 2, 2014

மனம் கடந்த இன்பம் வேண்டுமா?

மனம் கடந்த 
இன்பம் வேண்டுமா? 



இன்பமும்
துன்பமும்  ஒன்றுதான்

ஆம் இரண்டும் ஒன்றுதான்
இரண்டும் மனதில் உள்ள ஒரு எண்ணமே

நாம் அனைவரும் ஆன்ம ஸ்வரூபம்
என்று படித்திருக்கிறோம்.

எப்போதும் ஆனந்த நிலையில்
லயித்திருப்பதுதான் ஆன்மா

அதுதான்
நம் உண்மை நிலை.

அது நமக்குள் எப்போதும்
நிலையாக உள்ளது
பத்திரமாக உள்ளது.

அதைத்தான் நாம் அனைவரும் அவ்வப்போது
சில கணங்கள்  அதன் உள்ளே சென்று நம்மை
அறியாமல்  அந்த இன்பத்தை அனுபவிக்கிறோம்.

ஆனால் அந்த இன்பம் வெளியில் உள்ள
பொருட்களில் கிடைப்பதாக
தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

வெளியில் உள்ள பொருட்கள்தான்
இன்பம் தருகிறது என்று
வைத்துக்கொண்டால். அதே பொருள்
சில நேரங்களில் இன்பத்தை தருகிறது.
அதுவே சில நேரங்களில்
துன்பத்தை தருகிறது.

சில நேரங்களில் அது நமக்கு
எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

வெளியே பொருட்கள்தான் இன்பம் தருவது
என்றால் அது எப்போதும் இன்பத்தை
தருபவைகளாக இருக்கவேண்டும்.
அவ்வாறு இல்லையே ஏன் 
என்று நாம் சிந்திப்பதே இல்லை

உதாரணத்திற்கு இனிப்பு லட்டு
சுவைக்க சுவைக்க இன்பம் தருகிறது.

அனால் அவருக்கு சக்கரை நோய் வந்துவிட்டால்
அதுவே அவருக்கு துன்பம் தரும்
பொருளாகமாறிவிடுகிறது

அதே பொருள் அவருக்கு காய்ச்சல்
வந்துவிட்டால் அதே லட்டு கசக்கிறது.

இவையெல்லாம் நாம் மனம்
மூலம் அடையும் விளைவுகள்.

உறங்கும்போது மனம் வேலை செய்வதில்லை .
அப்போது இனிப்பும் இல்லை கசப்பும் இல்லை.
ஒன்றுமே இல்லை.

இருந்தும் உறக்கத்தில் இருந்த நேரம்
நிம்மதியாக உள்ளது.

நம்மை மறந்த நேரம்
நமக்கு இன்பமாக உள்ளது.
அந்த இன்பம் விவரிக்க
முடியாத நிலையில் உள்ளது.

மனம் இல்லாதபோது ஆனந்த நிலையில்
உள்ள ஆன்மாவில் நாம் இருப்பதால்
எந்த பாதிப்பும் இல்லாமல்
அமைதியான அந்த இன்பத்தின் நிலையை
விவரிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இந்த நிலையில் இருக்க நாம்
எப்போதும் இருக்க
மனத்தைக் கடக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி மனதை
 நாம் கண்காணிக்கவேண்டும்
அவ்வளவுதான். அதை கண்காணிப்பது
அதற்க்கு தெரியக்கூடாது. 

மனம் அழிந்தால்
என்றும் மங்காத இன்பம்.

மனதோடு சென்றால்
என்றும் மாளாது துன்பம்


1 comment:

  1. // மனத்தைக் கடக்க வேண்டும். // அப்படிச் சொல்லுங்க ஐயா...

    ReplyDelete