Saturday, March 29, 2014

ஸ்ரீ சீதாபதியே சிந்தனை செய்வாய் மனமே!


ஸ்ரீ சீதாபதியே சிந்தனை செய்வாய் மனமே!




அண்டர் குலத்திற்கு அதிபதி
அசுரர் ராக்கதரை அழித்தொழித்த பதி

குளிர் நிலவென பிரகாசிக்கும் முழு மதி
அன்னை சீதையின்உள்ளம்  கவர்ந்த சீதாபதி

அழகே வடிவெடுத்துவந்த சுந்தர ஹனுமான்
போற்றி துதித்த  ரகுபதி

அடியவர்கள் அகமகிழ்ந்து போற்றும்
ஆனந்த பூபதி

உரைக்க உரைக்க இன்பம் தரும்
ராம நாமம் பெயர் சூடிய நவநிதி

பல்லுயிரையும் பரிவோடு காத்து
பரமானந்தம் அளித்த பத்மநிதி

ராம ராம என்று சொல்ல
மனதில் தானே வந்தமையும் நிம்மதி



3 comments:

  1. ஓவியம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வந்தவினை ஓடிப்போக வரம் அருளும் - குணநிதி
    சங்கநிதி பதுமநிதி தந்தருளும் - ரகுபதி!..

    ஸ்ரீராம்.. ஜய ராம்.. ஜய ஜய ராம்!..

    ReplyDelete
  3. ஸ்ரீராம்.. ஜய ராம்.. ஜய ஜய ராம்!..

    ReplyDelete