Saturday, March 29, 2014

ஆசைதான் பிறவிக்கு காரணம்

ஆசைதான் பிறவிக்கு காரணம்


                                                         Metal foil art-T.R.Patabiraman 

ஆசைதான் பிறவிக்கு காரணம்

ஆசைகள் முழுவதும் 
நீங்கிவிட்டால் மறுபிறவி இல்லை

ஒவ்வொரு உயிரும் நிறைவேறாத 
ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்காக
மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்றன

ஒவ்வொரு பிறவியிலும் 
புதியதாக ஆசைகளை பற்றிகொள்கின்றன

ஆசைகளை நிறைவேற தடைகள் உண்டாகும்போது
கோபம் உண்டாகி பாவ செயல்களில் ஈடுபட்டு
தொடர்ந்து துன்பத்தில் மாட்டிகொண்டு தவிக்கின்றன

முடிவே இல்லாத இந்த சுழலில் 
இருந்து தப்புவதற்கு வழி
இறைவனை சரணடைதலே ஆகும்.

ஆனால் அதற்கு மனம் 
ஒத்துழைக்க வேண்டும்.
உடல் ஒத்துழைக்கவேண்டும்

மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
ஆசைகள் படிப்படியாக குறைந்து 
மனம் அமைதியடையும்போது
மனம் ஆன்மாவை நோக்கி திரும்பும்.

ஆன்மாவை அறிந்துகொண்டால்
இந்த பிறப்பு இறப்பு வளையத்திலிருந்து 
விடுபடும் வழி புலனாகும்

மிக சுலபமான வழி இவ்வுலக 
காரியங்களை செய்துகொண்டே
பிறருக்கு கேடு நினைக்காமல் 
துன்பம் விளைவிக்காமல்
ராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தால் போதும்.
நிச்சயம் வழி பிறக்கும்.

7 comments:

  1. விடுபடும் வழி சிறப்பான வழி...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்வோம்
      முழுமை அடைய
      இவ்வுலகில் வாழும்
      காலம்வரை

      Delete
  2. மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
    ஆசைகள் படிப்படியாக குறைந்து
    மனம் அமைதியடைந்து
    ஆன்மாவை நோக்கி திரும்பும்!..

    - வேத சாரம். சிந்தையில் கொள்ள வேண்டிய வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. அகந்தை கொண்டு
      பிறரை நிந்தை செய்வதை
      நிறுத்திக்கொண்டால்போதும்
      எந்தை இராமனின் திருவடியில்
      சிந்தை நிலையாய் நின்றுவிடும்.
      வருகைக்கு நன்றி

      Delete
  3. மனதை இறைவன்பால் திருப்பிவிட்டால்
    ஆசைகள் படிப்படியாக குறைந்து
    மனம் அமைதியடையும்போது
    மனம் ஆன்மாவை நோக்கி திரும்பும்.//

    நல்ல கருத்து ஐயா! நன்றி!

    ReplyDelete
  4. ஆசையே துன்பத்திற்குக் காரணம்
    நன்றி ஐயா

    ReplyDelete