Monday, March 10, 2014

தண்டனை வழங்க மனிதனுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?

தண்டனை வழங்க மனிதனுக்கு 
அதிகாரம் யார் கொடுத்தது?

இன்று யாரைப் பார்த்தாலும் தன்னை
நீதிபதியாக கருதிக்கொண்டு
மற்றவர்களுக்கு தண்டனை வழங்கத்
தொடங்கிவிடுகிறார்கள்

அதுவும் திரைப்பட கதாநாயகர்கள்
அவர்கள்தான் இந்த உலகைத்
திருத்த வந்த அவதாரங்கள் என்று
எண்ணிக்கொண்டு பேசுவதும்
மற்றவர்களை தண்டிப்பதும்
வாடிக்கையாக வரும் .

அவரவர்களுக்கு ஏற்றாற்போல்
வசனங்களை எழுதிகொடுக்கவும்
பாடல்களை இயற்றவும்படங்களை
எடுக்கவும் காசுக்காக
பலர் அணி வகுத்து நிற்கிறார்கள். .

ஆனால் நம்மையெல்லாம் படைத்த
அந்த இறைவனுக்குத்தான் அந்த
உரிமை உள்ளது என்பதை பலர்
புரிந்துகொள்வதில்லை.

கொலை செய்தவனை தூக்கில்
போடவேண்டும் என்று ஒரு கூட்டம்
கூட்டம் போடுகிறது
கொலை செய்தவனை தூக்கில் போடக்கூடாது
என்றும் கூட்டம் போட்டு கோஷமிடுகிறது.

ஒருவன் மற்றொரு உயிருக்கு தீங்கு
விளைவிக்கின்றான் என்றால் அவன்
மனநிலை சரியில்லாதவன் என்றுதான்
கருதவேண்டும்.

ஏனென்றால் நல்ல மனநிலை உள்ள ஒருவன்
பிறருக்கு தீங்கிழைக்கமாட்டான்.

எனவே அவன் மனம் திருந்த வாய்ப்பளித்து
அவனை சமுதாயத்தில் நல்ல மனிதனாக
வாழ வழி செய்வதுதான் நல்லாது என்று
நம்முடைய முன்னோர்களும் ரிஷிகளும்
செயல்படுத்திக்காட்டியுள்ளார்கள்.

நாயன்மார்களின், சரித்திரமும்,
பகவான் ரமணரின் சரித்திரமும்,
சீரடி சாயியின் சரித்திரமும்,
வால்மீகி  மகரிஷியின் சரித்திரமும்
இதைதான் வலியுறுத்துகின்றன.

தவறு செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குபவர்கள்
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்பவர்களே.
அவர்களால்தான் இந்த சமூகம் சீரழிகிறது.
எங்கெல்லாம் சுயநலமும், பொறாமையும்
சுரண்டலும்  கோலோச்சுகிறதோ
அங்கெல்லாம் இதுபோன்ற
தவறுகள் அதிகமாக நடக்கின்றன

பொதுவாழ்வில் உள்ளவர்கள்,
தங்கள் வாழ்வில் நேர்மையை,ஒழுக்கத்தை அன்பை ,
கடைபிடித்தால் இது போன்ற கேடுகளைக் குறைக்கலாம்

படைத்தவனுக்குத்தான் 
தவறு செய்பவர்களுக்கு 
தண்டனை வழங்கும் அதிகாரம் உள்ளது
படைப்புகளுக்கு அல்ல 

3 comments:

  1. நல்ல மனநிலை - அது தான் ஐயா பிரச்சனையே... தாம் செய்வதெல்லாம் சரி என்று நினைத்தால்...?

    ReplyDelete
  2. இதை முழுமையாக (என்னால்) ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  3. தவறு செய்யாத
    மனிதன் இருக்க முடியாது

    ஒவ்வொரு கால கட்டத்திலும்
    மனிதன் தவறு செய்கிறான்

    சில பேர்தான் மாட்டிக்கொள்கிறான்
    பலபேர் மாட்டிக்கொள்வதில்லை.

    ஒருவன் தவறு செய்தானா என்பது
    அவனவன் மனசாட்சிக்கு தெரியும்.

    தவறு செய்வது மனித இயல்பு

    அதிலிருந்து விடுபட்டு தன்னை
    திருத்திக்கொள்ளும் வரை மனிதர்கள்
    மீண்டும் மீண்டும் இவ்வுலகில்
    பிறந்துதான் ஆகவேண்டும்.

    தவறு செய்பவர்களை தண்டிக்கும் உரிமை
    அதேபோல தவறுகளை செய்யும்மற்ற
    மனிதர்களுக்கு தண்டிக்கும் உரிமை கிடையாது.

    ReplyDelete