Monday, March 31, 2014

கேட்ட வரத்தை தருவாயா? வர சித்தி விநாயகனே !





கேட்ட வரத்தை தருவாயா?
வர சித்தி விநாயகனே !



எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனதில் சலனமில்லாமல்
மதியிலிருளே தோன்றாமல்
நினைக்கும்போது நின்
மவுன நிலை வந்திட
நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம்
நூறு வயதிவையும்
தர நீ கடவாயே .
என்றான்  பாரதி

பாரதி கேட்டான் நீ
கொடுக்கவில்லை.

நாங்கள் கேட்கிறோம்
எங்களுக்காகவாவது அவன்
கேட்ட வரத்தை தருவாயா?
வர சித்தி விநாயகனே !





7 comments:

  1. நிச்சயம் தருவார்! :)))

    ReplyDelete
  2. உங்கள் வாக்கு பலிக்கட்டும்

    ReplyDelete
  3. ஐயா... உங்களுக்கு கிடைக்காமலா இருக்கும்...?

    ReplyDelete
    Replies
    1. ஆசைகளை குறைத்துக்கொண்டேன்.அதனால்
      இருக்கும் செல்வம் போதும்.மனம் அடங்கிவிட்டது. இருந்தாலும் அதை நம்ப முடியாது.
      மவுன நிலை -உறங்குபோதுமட்டும்தான் உள்ளது
      அது விழித்திருக்கும் நிலையிலும் அடைய முயற்சி பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் .

      Delete
  4. மனதில் சலனமில்லாமல் மதியிலிருளே தோன்றாமல்
    நினைக்கும்போது நின் மவுன நிலை வந்திட
    நீ செயல் வேண்டும் கனக்குஞ் செல்வம்
    நூறு வயதிவையும்தர நீ கடவாயே .

    இதைப் படிக்கும் போதே - மனம் அமைதியாகி விடுகின்றதே!.. அப்புறம் எதற்கு (தனியாக) கனக்கும் செல்வம்!...

    ReplyDelete
  5. பாரதிக்கு விநாயகப்பெருமான் ஏன்
    செல்வம் தரவில்லை தெரியுமா?

    சமையலுக்கு கடனாக வாங்கி வந்த
    பிடி அரிசியையே குருவிகளுக்கு
    போட்டு அவைகள் பசியாற பார்த்து
    மகிழ்ந்தவனுக்கு கனக்கும் செல்வம் அளித்தால்
    அவை அனைத்தையும் வறியவர்களுக்கு அளித்துவிட்டு அப்போதும் அவன் ஏழையாகத்தான் இருந்திருப்பான்.

    நமக்கு எதற்காக கனக்கும் செல்வம் கேட்கிறோமென்றால் பசித்தவர்க்கு உணவளிக்கலாமே !இல்லாதவர்க்கு உதவலாமே !

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் ஈஸ்வர சைதன்யம் தானே ஐயா!..
      தவிரவும் -
      அவை அனைத்தையும் வறியவர்களுக்கு அளித்துவிட்டு அப்போதும் அவன் ஏழையாகத்தான் இருந்திருப்பான்.
      என்பதே மிக உயர்ந்த நிலை!..

      மேலும் பாரதி கேட்கும் கனக்கும் செல்வம் என்பதே வேறு!..
      அதற்கு விடை அபிராமி அந்தாதியில் உள்ளது.

      Delete