Friday, March 28, 2014

மரணம் வரும் நேரத்தில்?

மரணம் வரும் நேரத்தில்?

மரணம் வரும் தருவாயில் சங்கரா ,சங்கரா 
என்று சொன்னால் சங்கரன் வருவானா? 
என்று சொல்ல கேட்டிருக்கலாம்.

[Image1]

படம்-நன்றி-கூகுள் 


ஆனால் மரணம் வரும் நேரத்தில் 
சங்கரா,சங்கரா என்று சொல்ல முடியுமா? 
என்பதுதான் கேள்வி.

காரணம் என்னவென்றால் மரணம் எப்படி வரும்,
எப்போது வரும், எந்த வடிவில் வரும்,
விழித்திருக்கும்போது போது வருமா,அல்லது 
தூங்கும்போது வருமா ,அல்லது 
மரணம் வரும்போது நமக்கு சுயநினைவு இருக்குமா 
போன்ற கேள்விகளுக்கு 
விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

விடை நிச்சயம் கிடைக்காது

எனவேதான் இறைவன் நாமத்தை 
எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

இயல்பாக் நாம் தெரிந்தோ தெரியாமலோ 
மூச்சு விடுவதுபோல் இறைநாமத்தை 
சொல்லிகொண்டிருக்கவேண்டும்

அப்போதுதான் உயிர் பிரியும்போது 
நம் மனது இறைவனை பற்றிகொண்டிருக்கும்

பகவத் கீதையில் உயிர் பிரியும் போது
 நம் மனதில் எந்த எண்ணம் உறுதியாக உள்ளதோ 
அதுவே நம் அடுத்த பிறவியை நிர்ணயிக்கும்.
என்று சொல்லபட்டிருக்கிறது.

அதை கருத்தில்கொண்டு நாம் எந்த வேலை 
செய்துகொண்டிருந்தாலும் 
சொல்வதற்கு எளிதான் ராம நாமத்தை 
சொல்லிகொண்டிருந்தால் இவ்வுலகில்
மீண்டும் பிறந்து துன்பபடவேண்டியதில்லை.



சங்கரா  சங்கரா என்று  
சொல்லிக்கொண்டிருந்தாலும் போதும் 
அவன் மரிப்பவரின் காதில் ராம நாமத்தை
நினைவு தப்பும் முன் 
உபதேசம் செய்துவிடுவான். 

4 comments:

  1. ஓவியமும் அருமை... அழகு... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. //இயல்பாக் நாம் தெரிந்தோ தெரியாமலோ மூச்சு விடுவதுபோல் இறைநாமத்தை சொல்லிகொண்டிருக்கவேண்டும்.அப்போதுதான் உயிர் பிரியும்போது நம் மனது இறைவனை பற்றிகொண்டிருக்கும்//அருமையான கருத்து ஐயா! நன்றி!

    ReplyDelete