Tuesday, March 25, 2014

வேள்வியில் பிறந்த கேள்விகள்(பகுதி-2)

வேள்வியில்
 பிறந்த கேள்விகள்(பகுதி-2)

நசிகேதஸ்ஸை யமலோகதிர்க்கு 
அழைத்து செல்ல யம தூதர்கள் 
வந்துவிட்டார்கள். 


அவனும் அவர்களோடு 
புறப்பட்டுவிட்டான். 

தானம் கொடுக்கபட்டவுடன் அந்த பொருள்  தானம் 
பெற்றவருக்குத்தான் சொந்தம் அல்லவா !

ஆனால் அங்கோ யம தேவதை இல்லை 
அதனால் நசிகேதஸ் யமனை 
காணமுடியவில்லை 

மூன்று இரவுகள் யமலோகத்தின் 
வாயிலிலேயே காத்துக் கிடந்தான் அவன். 

யம தூதர்கள் யமன் வந்தவுடன் 
நசிகேதஸ்ஸை பற்றி யமனிடம் கூறினார்கள்.

யமன் கூறினான் .அவன் இப்போது இங்கு வரும் 
நேரம் இன்னும் வரவில்லையே என்றான்.

அதற்கு யம தூதர்கள்.  அவன் தந்தை அவனை 
உங்களுக்கு  தானம் அளித்தமையால் 
கூட்டி வந்திருக்கிறோம். என்றார்கள். 

பொதுவாக யமலோகம் வருவதற்கு 
யாரும் விரும்புவதில்லை.
ஆனால் 
இவனோ மகிழ்ச்சியாகக் காணப்படுகிறான்.
தங்களை சந்திக்கவேண்டும் என்று 
மூன்று நாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறான் என்றனர். 

உடனே யமன் அவனை 
சந்திக்க அனுமதி அளித்தான்.

பிராம்மண சிறுவனே, என் வீட்டில்
மூன்று நாட்களாகஎன்னைக் 
காண காத்திருக்கின்றாய். 

எல்லோரும் வெறுக்கும் என்னைக் காண 
வந்த உனக்கு வணக்கம். 


மகிழ்ச்சியுடன் உனக்கு காத்திருந்த 
ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றாக 
மூன்று வரங்களைத் தருகிறேன், பெற்றுக்கொள் என்றான். 

நச்சிகேதச்சுக்கு தன் தந்தை நினைவு வந்தது. 
அவர் தன் மீது மிகவும் கோபமாக இருந்தது நினைவுக்கு வந்தது. 
அதனால் அல்லவோ அவர் தன்னை
யமனுக்கு தானமாக அளித்துவிட்டார். 
அவருக்கு தன் மீது உள்ள கோபம் 
தணியவேண்டும் என்று நினைத்தான். 

அவருடைய குறைகளை சுட்டிக் காட்டிய என் மீது 
அகந்தையினால் என் மீது கோபம் கொண்டு  
 தன் நிலை இழந்து என்னை வெறுத்த கவ்தமர் 
என்ற மறு பெயருடைய என் தந்தையின் 
மன நிலை மாறி என் மீது அன்பு செலுத்தவேண்டும் 
என்றும்,நான் தங்களிடமிருந்து 
மீண்டும் பூவுலகம் சென்று என் தந்தையை சந்திக்கவேண்டும். 
அப்போது அவர் என்னைஅன்புடன்
எதிர்கொள்ளவேண்டும்  
என்று முதல் வரத்தினை  கேட்டான். 


என்ன நல்ல குணம் பாருங்கள்
 நசிகேதச்சுக்கு?

தன் மீது கோபம் கொண்ட தன தந்தையை வெறுக்காமல் 
அவர் மனம் மாறி தன்  மீது 
அன்பை பொழிய வேண்டும் என்று 
இறைவனுடன் கேட்கின்றான் பாருங்கள்.

அனைவரும் இந்த குணத்தை 
கைக்கொண்டால் இந்த உலகமே அன்பு மயமாகி விடும் அல்லவா? 

உன் விருப்பப்படியே முதல் வரத்தினை தந்தேன் என்றன் யமன். 

அடுத்த இரண்டாவது வரத்தைக் கேட்டான். '

அது என்ன? 

இன்னும் வரும் 

படங்கள்-கூகிள் -நன்றி 

4 comments:

  1. முதல் வரமே முத்தான வரம்.

    ReplyDelete
    Replies
    1. முன்னோர்களின் வாழ்வில் இது போன்ற நல்ல
      பல முத்துக்கள் உள்ளன

      அவைகளை மட்டும் நாம் தேடி எடுத்துக்கொண்டால் நமக்கு இந்த உலக வாழ்வை மகிழ்ச்சியாக நடத்த உதவும்.

      மேலும் மரண தேவனை அவன் வரும்போது மகிழ்ச்சியாக வரவேற்றால் அவனிடமிருந்து வரங்களையும் பெற்று மகிழலாம் என்பதும் இந்த கதையின் மூலம் தெரிய வருகிறது.

      Delete
  2. அடுத்த வரத்தைப் பற்றி அறிய ஆவல் கூடுகிறது ஐயா...

    ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாய்க்கு மெல்ல அவல் நிச்சயம் கிடைக்கும்

      Delete