Sunday, March 2, 2014

பிருகு மகரிஷி (3)-முடிவுபகுதி


பிருகு மகரிஷி (3)-முடிவுபகுதி 


 பிருகு மகரிஷி (3)


மகா விஷ்ணுவின் மார்பினில் 
உறைபவள் மஹாலக்ஷ்மி 


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

பிருகு மகரிஷியின் இந்த அடாத செயலை கண்ட 
அவளுக்கு மகரிஷிமேல் அடங்காக் கோபம் வந்தது.



பகவானை அவமதித்தது மட்டுமல்லாமல் 
தன்னையும் அவமதித்து  விட்டதாக 
அவள் எண்ணினாள்.

அதற்க்கு அவருக்கு தக்க பாடம் 
புகட்ட வேண்டுமென்று எண்ணி  
தான் இனிமேல் பிராம்மணர்களின் இல்லங்களில்
வசிக்கமாட்டேன் என்றும் அவர்கள் 
வறுமையில் வாடட்டும் 
என்று சாபமிட்டாள்.

இந்த சாபத்தை உணர்ந்தவுடன் மகரிஷி 
தான் வந்த நோக்கத்தையும், அதனால்
 தான் செய்த செயலையும் விளக்கியவுடன், 
மஹாலக்ஷ்மி தான் இட்ட சாபத்தை 
மாற்றமுடியாது என்றும் 
ஆனால் பிராம்மணர்கள் மகாவிஷ்ணுவை 
ஆராதித்தால் அவர்களை 
வறுமையிலிருந்து விடுவிப்பேன் என்று 
சாப விமோசனத்திர்க்கான  
வழியைக் கூறினாள்
இந்த சம்பவத்திற்குப் பிறகு பிருகு மகரிஷி 
ஜோதிட சாத்திரத்திற்க்கான   ஒரு நூலை 
எழுதத் தொடங்கினார் 

விநாயகப் பெருமானையும் ,
சரஸ்வதி தேவியையும் வணங்கி பிராம்மணர்கள் 
இந்த சாஸ்திரத்தினை  நன்றாக கற்று  அதில் வரும் 
வருவாயைக் கொண்டு ஜீவிக்க 
வழி வகை செய்யும் வகையில் "
ப்ருகு சம்ஹிதா "என்ற நூலைப் படைத்தார்.



ஆனால்  உண்மையில் இந்த நூல்
மனித குலத்திற்க்கானது ஆகும்.



அனைவரும் நல்ல முறையில் வாழ்ந்து 
முடிவில் முக்தி அடையும் மார்க்கத்தை 
காட்டும் வகையில் இந்த நூல் விளங்குகிறது. 

மகரிஷி அனைவரின்  ஜாதகங்களை தொகுத்து 
அந்த ஜாதகர்களுக்கு  அவர்கள் வாழ்நாள் முழுவதர்க்கான 
பலன்களை கணித்து பிருகு சம்ஹித என்ற நூலை
மனித குலத்திற்கு அளித்துள்ளார் .
ஆனால் காலப் போக்கில் அந்த நூலின்
பல பகுதிகள் அழிந்து போயின. இருந்தாலும் மீதமுள்ள 
சில பகுதிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் 
என்னும் ஊரில் வைக்கப்பட்டுள்ளன .

பிருகு சம்ஹிதா என்ற நூல்தான் 
ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக் கருதப்படுகிறது.

 

இருந்தாலும் பல ரிஷிகள் 
பிருகு மகரிஷியின் அடாத செயலைக் கண்டித்தனர். 

மும்மூர்த்திகளைத் சோதனை செய்ய இவர் யார்? 
என்றும் அவர்களின் தனிமையில் 
இருக்கும்போது அங்கு செல்ல இவருக்கு 
யார் அதிகாரம் கொடுத்தது என்றும் மேலும் 
சகல சக்தி வாய்ந்த தெய்வங்களுக்கு 
சாபம் அளித்ததும் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர் செய்த இந்த அடாத  செயலுக்கு 
அந்த தெய்வங்கள் நினைத்திருந்தால் பார்வையிலேயே 
அவரை சுட்டு பொசுக்கி சாம்பலாகி இருக்க  முடியும். 

ஆனால் அவ்வாறு செய்யாது அவர் செயலைப் 
பொறுத்தருளி அன்போடு வரங்களை 
அல்லவோ வாரி வழங்கினர்  என்பது சிந்திக்கத்தக்கது.



அதன் பிறகு தன்  அறியாமையை உணர்ந்த 
பிருகு மகரிஷி மும்மூர்த்திகளிடமும் 
தன்னை  மன்னிக்குமாறு வேண்டியதும்.
அவரை மன்னித்து ஆசீர்வதித்தனர். 

இதைத் தொடர்ந்து இனி எல்லா வேள்விகளிலும் 
பூர்ணாஹுதி மும்மூர்த்திகளுக்கும் 
ஆஹுதி மட்டும் அவரவர் விரும்பும்
இஷ்ட தெய்வங்களுக்கும் வழங்குவது 
என்ற முறை வழக்கத்தில் வந்தது

படங்கள்-நன்றி-கூகிள்




2 comments:

  1. // அதன் பிறகு தன் அறியாமையை உணர்ந்த
    பிருகு மகரிஷி //

    மகரிஷிகளுக்கும் மனம் மயங்கும்! :))

    ReplyDelete
  2. பிருகு சம்ஹிதா என்ற நூல் தகவல் அறியாதவை ஐயா... நன்றி...

    ReplyDelete