Thursday, March 13, 2014

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்

ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள் 




உண்மையான தொண்டு

பிறருக்கு நலம் சேர்ப்பவர்க்காகவும்
பிறரை மகிழ்விப்பதர்க்காகவும் வாழுங்கள்

நீங்கள் எந்த அளவிற்கு
சுயநலம் இல்லாமல் இருக்கிறீர்களோ
அந்த அளவுக்கு பிறருக்கு தொண்டு
செய்ய முடியும் அல்லவா?

கடவுள் உங்கள்
செயல்களைப் பார்க்கவில்லை

நீங்கள் செயல்படும்போது உங்களது நோக்கம்
 மனப்பான்மை,உணர்வு ஆகியவை
எப்படிப்பட்டதாக இருக்கிறது
என்பதையே அவர் பார்க்கிறார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கடவுள்
ஆர்வம் காட்டவில்லை

நீங்கள் என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறீர்கள்
என்பதை அறிந்துகொள்வதில்தான்
அவர் ஆர்வம் காட்டுகிறார்.

கடவுளை நம்புங்கள்
நல்லதையே செய்யுங்கள்
இது இதயத்துக்கு திருப்தி அளிக்கிறது

தனிமனிதன் நலமுடன் இருப்பது பிரபஞ்ச
நலத்தின் ஒரு அங்கம் ஆகும்

நமது ஒவ்வொரு  செயலும் பிரபஞ்ச நலனைக்
கருத்தில் கொண்டே செய்யப்படவேண்டும்.

இது கர்மயோகக் கொள்கை ஆகும்
அதாவது தனிமனிதன் தனது சுகத்தைப் பற்றி
நினைக்காமல் கடமையை நிறைவேற்றும்
நோக்கத்துடன் செயல்படுவது
கர்மயோகம் ஆகும்.

(இன்னும் வரும்)

3 comments:

  1. அருமையான சிந்தனைகள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. //நீங்கள் என்ன மனப்பான்மையுடன் செயல்படுகிறீர்கள்
    என்பதை அறிந்துகொள்வதில்தான்
    அவர் ஆர்வம் காட்டுகிறார்//

    புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்!

    ReplyDelete