Tuesday, March 18, 2014

கரிமுகனே ! கரிமுகனே!

கரிமுகனே ! கரிமுகனே!

கரிமுகனே உன் அருள் பெற
மற்றவர் அறிமுகம் எதற்கு?



ஓவியம்-தி .ஆர்.பட்டாபிராமன் 

மண்ணாலே உன் வடிவம் செய்தாலும்
மங்கலப் பொருளாம் மஞ்சளில்
பிடித்து வைத்தாலும் மங்காத
சக்தி கொண்ட சக்தியின்
மைந்தன் அல்லவோ  நீ ?

கண்ணாலே உன் வடிவத்தைக்
கண்டு வழிபட்டாலும் மண்ணாளும்
தகுதியை வழங்கிடுபவன் நீயன்றோ!

வினையால் வந்த இவ்வுடம்பில்
வினையாற்றமல் இருக்க இயலுமோ?

வினை புரிவதால் கூடும் சுமைகளை
நீக்கி எங்களைக் காப்பாற்ற உன் போல்
இரக்கமுள்ள தெய்வம் வேறு யாராவது உண்டோ?

அம்பாரம் அம்பாரமாய் செல்வம் இருந்திடினும்
அவையெல்லாம் மன அமைதியைத் தந்திடுமோ?

அழகே உருவாய்  அமர்ந்தவனே
அடியவர்களைக்  காக்கும் கணபதியே
மனப் பாரத்தை இறக்கி வைக்க நீ இருக்கையில்
எங்களுக்கு ஏது குறை? 

காணுமிடமில்லாம் கோயில் கொண்டு
எங்களைக் காக்கின்ற கஜமுகனே
எங்கள்  உள்ளக் கோயிலிலும்
நிலையாய் நின்றருள் செய்திடுவாய்.


7 comments:

  1. அதானே...? முழு முதற்கடவுள் நமக்குள் இருக்கும் போது குறை ஏது...?

    ReplyDelete
  2. தங்களின் கருத்துரைக்காக :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Clay-Man.html

    ReplyDelete
  3. உள்ளக் கோயிலிலும்
    உறையும் உன்னத
    உமை மைந்தனை
    உயர்த்திய உன்னதப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  4. விக்ன விநாயகர் அழகு. அனைவருக்கும் செல்லக் கடவுள். உள்ளத்துக்கு நெருக்கக் கடவுள்.

    ReplyDelete
    Replies
    1. உள்ளும் புறமும் நிறைந்து
      உள்ளத்திற்கு உற்சாகம் தரும் கடவுள்

      Delete