Wednesday, March 26, 2014

சொர்க்க வாசல்

சொர்க்க வாசல் 





இறைவன்
மனித வடிவில் உள்ளான்

அவனை அறியும் ஞானத்தை
அளிக்க குரு வடிவாக வருகின்றான்.

உலக மக்களை மாயையிலிருந்து மீட்டு
கடைதேற்ற தொடர்ந்து குருமார்கள்
அவதாரம் செய்துகொண்டே  இருக்கிறார்கள்.

புண்ணியம் செய்தவர்கள் அவர்களின்
திருவடிகளை பிடித்துக்கொண்டு
கடைதேறுகிரார்கள்.

மற்றவர்கள் கடையில் விற்கும் பொருள்களைப்
பெறவேண்டி உழைத்து களைத்து
அரிதாக கிடைத்த மனித பிறவியை
வீணடிக்கிறார்கள்.

பிறவி எடுத்த நோக்கத்தை உணர்ந்து
நல்ல சற்குருவை நாடாது
 மற்ற வடிவங்களில்
இறைவனைத் தேடுவது வீண் விரயம்.

குருவின் உபதேசங்களை செயல்படுத்தாது
தேசம் தேசமாக தீர்த்த யாத்திரை போவதால்
யாது பயன்?

உண்மையான சொர்க்கம்  என்பது
சத்குருவின் திருவடிகளில்தான்
உள்ளது.

அதுதான் நிலையான பதத்தை
நமக்கு அருளும் மார்க்கம்
என்பதை அதை அனுபவித்தவரே அறிவர்.

உலக மோகத்தில் மூழ்கியவர்களுகும்
தனக்கு நிகர் யாரும் இல்லை என்று
அகந்தை கொண்டு பிதற்றி திரிபவர்களுக்கும்
குருவின் மகிமை விளங்காது 

2 comments:

  1. முதலில் பிறவி எடுத்த நோக்கத்தை உணர வேண்டும் அல்லவா...? ஐயா...

    ReplyDelete