Sunday, June 30, 2013

கண்ணனை எங்கே காணோம்?

கண்ணனை எங்கே காணோம்?




பகவான் ரமணரின் சிந்தனைகள் (3)

பகவான் ரமணரின் சிந்தனைகள் (3) 
























தொலைபேசி மணி ஒலிக்கிறது.

தொலைபேசியை கையில் எடுத்தவர்"ஹலோ
.நான்தான் பேசுகிறேன் என்கிறார்.

அவருக்கு அடுத்தமுனையில்
பேசுபவரின் குரலை அடையாளம்
கண்டுகொண்டதால்

அதேபோல் அடுத்த முனையில் இருப்பவரும்
இவர் குரலை அடையாளம் கண்டுகொண்டுவிட்டதால்
அவரும் "நான்தான்  பேசுகிறேன் ,
சொல்லுங்கோ என்கிறார்.

இந்த நிகழ்வில் இருவரும்
பொதுவான "நான்" என்ற சொல்லை
 பயன்படுத்தியுள்ளார்கள்.

இருவருக்கும் பெயர் வேறு இருக்கும்,
 உடலமைப்பு வேறு வேறு இருக்கும்.
 எண்ணங்கள் வேறு வேறு இருக்கும்.
வாழ்வின் நிலைகள், கல்வி தகுதிகள், ,
திறமைகள் வேறு வேறாக இருக்கும்.

இருந்தும் நான் என்ற
சொல்தான் இருவருக்கும் ஒன்றாக
இருப்பதுபோல் இந்த உலகில் உள்ள
அனைத்து மனிதர்களும் "நான்" என்ற
சொல் பொதுவானது.

அது எல்லோருக்கும் ஒன்றுதான்.

ஒவ்வொருவரும்
தனி தனியாக நான் என்று உச்சரித்தாலும்
அது ஒன்றுதான்.

ஒன்றுதான்பலவாக இருக்கிறது.

அதே நேரத்தில் பலவாக இருக்கும்
அந்த "நான்" ஒன்றுதான்.

இந்த உலகில் ஒவ்வொரு மனிதர்களும்
முதலில் எண்ணும்  எண்ணம்
"நான்' என்ற எண்ணமாகும்.

அதிலிருந்துதான் மற்ற கோடிக்கணக்கான
எண்ணங்கள் உண்டாகின்றன.

ஆனால் நாம் "நான்" என்ற எண்ணம்
எழும் ஊற்றுக்கண்ணை மறந்துவிட்டோம்.

ஊனக்கண் காணும்,
அனைத்தையும் நம்முடையது
என்று எண்ண தொடங்கிவிட்டோம்.

அழியும்தன்மையுடைய, பழுதடையும்
தன்மையுடைய,நிலையற்ற
பல கருவிகளை உடைய
இந்த உடலைதான்
" நான் "என்று எண்ணுகிறோம்.

அவைகள் நம்மிடமிருந்து
பிரிக்கப்பட்டால்,
அழுது அலற்றுகிறோம்
.
(இன்னும் வரும்)

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்கள்.

ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர்  
பாடல்கள். 

















ராகம் : காம்போதி
தாளம் : ஆதி

பல்லவி

குழலூதி  மனமெல்லாம்
கொள்ளைகொண்டபின்னும்
குறையேதும்  எனக்கேதடி  சகியே

சரணம்

1.(மிக  மிக ) அழகான  மயிலாடவும்
காற்றில்  அசைந்தாடும்  கொடிபோலவும்
அகமகிழ்ந்திலவும்
நிலவொளி  தனிலே
தனைமறந்து  புள்ளினம்  கூவ
அசைந்தாடி  மிக  இசைந்தோடி
வரும்  நலம்  காண
ஒரு  மனம்  நாட
தகுமிகு  என  ஒரு  பதம்  பாட
தகிட  ததிமி  என  நடமாட

கன்று  பசுவினமும்  நின்று
புடைசூழ  என்றும்  மலருமுக
இறைவன்  கனிவோடு  (குழலூதி )

2.(கண்ணன் ) மகர  குண்டலமாடவும்
அதற்கு  ஏற்ப  மகுடம்  ஒளிவீசவும்
மிகவும்  எழிலாகவும்  (தென்றல் )
காற்றில்  மிளிரும்  துகிலாடவும்

இந்த இனிமையான  பாடலை பாடாத
இசைக்கலைஞர் இல்லை என்றே சொல்லலாம்.

Friday, June 28, 2013

பகவான் ரமணரின் சிந்தனைகள்(2)

பகவான் ரமணரின் சிந்தனைகள்(2)








நான் யார்?

இந்த கேள்வியை
ஒருவர்  தனக்குள் கேட்டார் 
விடை தெரிந்ததும் 
பகவான் ரமண மகரிஷி ஆகிவிட்டார். 

அவரை சந்தித்த அனைவர்களிடமும்
அதே கேள்வியை அவர்களுக்குள்
கேட்குமாறு அன்றும் சொன்னார்

இன்றும் அவரை பற்றி நினைப்பவர்களுக்கு
சொல்லிக்கொண்டிருக்கிறார்  .

ஆனால்  அவர் உபதேசத்தை
கேட்பவர்கள்தான்  இல்லை  .

பல தேசங்களிலிருந்து வருகிறார்கள்
அவர் உருவமாய் இருந்து
வாழ்ந்த இடத்தை பார்க்க

ஆனால் அவர் சொல்லியதை
செயல்படுத்த யாரும் முழு மனதுடன்
முயற்சிப்பதில்லை.

அவர் வடிவத்தை
தியானம் செய்கிறார்கள்
அவர் சொல்லிய ஆத்ம
தியானத்தை செய்வதில்லை.

எத்தனை   முறை படித்தாலும்
அவரின் "நான் யார் "என்ற
அவரின் முதல்  உபதேசம்
படிப்பதற்கு  எளிமையாக  இருக்கிறது .
 இனிமையாக  இருக்கிறது
அப்போதே ஞானம்
கிடைத்து விட்டது போல்
ஒரு மகிழ்ச்சி .
ஆனால் நடைமுறையில்
சாத்தியப்படமாட்டேன்  என்கிறது .

அவரை பற்றியும்
அவர் மற்றவர்களோடு  உரையாடிய
 வார்த்தைகளைப்பற்றியும்
 பல ஆயிரக்கணக்கில்
 புத்தகங்கள்  வெளிவந்துவிட்டது.

படிப்பதற்கே நேரம் இல்லை .

இன்னும்  வந்துகொண்டுஇருக்கிறது
படித்து புரிந்து கொள்ளும் சக்தியும் இல்லை.
பொறுமையும் இல்லை

நம்முடைய மனம்
இன்ஸ்டன்ட் காப்பி போல்,
உடனடியாக
ஆத்ம ஞானம் வேண்டும் என்கிறது.

ஆனால் நம்மை ஆட்டிவைத்து
துன்பத்தில் ஆழ்த்தும் அகந்தையை
விடத் தயாரில்லை

முழு மூச்சுடன் நம்பிக்கையுடன்
போராட தயாரில்லை

ஒரு சின்ன அற்ப சுகத்தைக் கூட
தியாகமும் செய்ய தயாரில்லை

,உடலை மறந்து, உள்ளத்தை மறந்து,
 உலகியல் அறிவை ஒதுக்கி வைத்து
,உடைமைகளை ,
உறவுகளின் மீதான  பற்றினை துறந்து
பொறுமையுடனும் சாதனை செய்யாமல்
எப்படி ஆத்ம ஞானம் கிடைக்கும்?

நிச்சயம் கிடைக்காது

அப்படியானால் என்னதான் வழி?

தொடர்ந்து சிந்திப்போம்.

பகவான் ரமணரின் சிந்தனைகள் (1)

பகவான் ரமணரின் சிந்தனைகள் (1)

















நாம் தேடும் ஆத்ம வஸ்து
நமக்குள்ளே இருக்கிறது

அதை புத்தகங்களிலோ அல்லது
வெளி உலகிலோ தேடுவதில் பயனில்லை.

அதை நம்முள்ளேதான்
தேட வேண்டும்.

நான் யார் ? என்ற கேள்வியை
நாம் கேட்டுகொண்டே இருக்கவேண்டும்.

அப்போது அந்த "நான்" என்ற
ஒலிஎங்கிருந்து வருகிறது
என்று பார்த்தால் நம் இதயத்திலிருந்து
வருவதை உணரலாம்

அதை உணர்ந்துகொண்டால்
அப்புறம் வேறு உபாயம் எதுவும்
 நாட வேண்டிய அவசியமில்லை.
வேறு எங்கும் அலையவேண்டிய
அவசியமும் இல்லை.

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (93)

தியாகராஜ  சுவாமிகளின்  
சிந்தனைகள் (93)































இராமா
உன் நாமம் மிகவும் கொடிய 
பாதகங்களை அடியுடன்
ஒழிப்பது 

கீர்த்தனை(135)-பேரிடி நின்னு பெஞ்சிந வாரெவெரெ
ராகம்-கர ஹரப்ரிய -தாளம்-ஆதி 

அனைத்திற்கும் உயர்ந்ததும் சாரமானதுமான
தாரக நாமத்தையே உனக்குப் பெயராக
இட்டு உன்னை வளர்த்தவர்கள்  யாவர்?
அவர்களை எனக்குக் காட்டுவாயாக !

அவர்களிட்ட உனது திருநாமம்
சகல மதங்களுக்கும் சம்மதமானது

மிகவும் கொடிய
பாதகங்களை அடியுடன்
ஒழிப்பது

இத்தியாகராஜன் அனவரதமும்
பஜனை செய்யும் திருமந்திரமும்
அதுவேயாகும்.

இந்த உலகில் பாவம்  செய்யாமல் 
யாரும் இருக்க முடியாது. போதாக்குறைக்கு
முன் ஜன்ம பாவங்கள் வேறு பிறவிதோறும்
நம்மோடு தொடர்ந்து வந்து நம்மை 
வருத்திக்கொண்டிருக்கின்றன

இந்நிலையில் நம்மை 
காப்பாற்றி கரை சேர்க்கும் அருமருந்து
இராம நாமம்தான். அதை விடாது 
பிடித்துகொண்டு கரையேறுவோம். 

Thursday, June 27, 2013

நீல வண்ண கண்ணா வாடா

நீல வண்ண கண்ணா வாடா 




























நான் மேலே  வரைந்த 
கண்ணன்படத்திற்கு
பொருத்தமான பாடல் 


1955 ஆம் ஆண்டு வெளிவந்த மங்கையர் திலகம்
என்ற படத்தில் வந்த இனிமையான் பாடல்.
ஆர். பாலசரஸ்வதி அவர்கள் பாடியது.
பாடலை இயற்றியவர். மருதகாசி.
இசைஅமைத்தவர். தஷிணாமூர்த்தி (பாடல்கேட்க)
http://www.youtube.com/watch?v=c-tPHG3LEB4


நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்த வடிவில்  வந்தான்
எல்லையில்லா கருணைதன்னை
என்னவென்று சொல்வேனப்பா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் .  வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னானால நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்க  செய்யும்  வாடை  காற்றே
நியாயமில்லை உந்தன்  செய்கை
தடை  செய்வேன்  தாளை  போட்டு
முடிந்தால்  உன்  திறமை  காட்டு

விண்ணில்  நான்  இருக்கும்  போது
மண்ணில்  ஒரு  சந்திரன்  ஏது
அம்மா  என்ன  புதுமை  என்றே
கேட்கும்  மதியை  பாரு

இன்ப  வாழ்வின்  பிம்பம்  நீயே
இணையில்லா  செல்வம்  நீயே
பொங்கும்  அன்பின்  ஜோதி  நீயே
புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே


Tuesday, June 25, 2013

மாதா அம்ருதானந்தமயி பஜன்.

மாதா அம்ருதானந்தமயி பஜன். 

ராதை உள்ள இடத்தில்
எல்லாம் கண்ணன் இல்லையா






உன் ராசகீதம் தன்னில்
அவள் மயங்க வில்லையா

கீதை சொன்ன மொழியில் எல்லாம்
நீயும் இல்லையா கண்ணா

கீதை கூறும் பொருளனைத்தும்
நீயே அல்லவா

கோபியர்கள்  நெஞ்சம்
உந்தன் மஞ்சமல்லவா கண்ணா

கோபியரும் நீயும்
ஒன்றே அல்லவா

நல்லவையும் அல்லவையும்
நீயே அல்லவா-கண்ணா

நல்மனதில் உந்தன் ஒளி தங்கவில்லையா
தங்கவில்லையா

அடிப்பதுவும் அணைப்பதுவும்
நீயே அல்லவா-கண்ணா

அதன் மூலம் சொல்லுவதும்
வேதம் அல்லவா

மனமுன்னை மறைப்பதுவும் 
மாயை அல்லவா-கண்ணா 

மனத்திரையை விலக்கி விட்டால் 
நீயே அல்லவா 
அங்கு நீயே அல்லவா (கண்ணா) 


அருமையான   வரிகள் 





..

Monday, June 24, 2013

தெய்வம் மானுஷ ரூபேண என்கிறது வேதங்கள்


தெய்வம் மானுஷ ரூபேண 
என்கிறது வேதங்கள்

வடிவங்கள் மாறும்,
வடிவங்கள் மறைந்து புதிது புதிதாய்
தோன்றிக் கொண்டுதான் இருக்கும்

இந்த உலகில். நம் வடிவத்திற்குள்
இருந்து ஆட்சி செய்யும், நம்மை
இயக்கிகொண்டிருக்கும்
ஆத்ம ஸ்வரூபத்தைதான்
அறிந்துகொண்டு உபாசிக்க
கற்றுக் கொள்ளவேண்டும்

அப்போதுதான் ராக தேவேஷம்
(விருப்பு-வெறுப்பு)மறைந்து உண்மையான
அன்பை நாம் பெறமுடியும்.
உணரமுடியும், அதை மற்றவர்களிடம்
கண்டு தெய்வீக ஞானத்தை  அடையமுடியும்.
.
தெய்வம் மானுஷ ரூபேண
என்கிறது வேதங்கள்

எல்லோருள்ளும் இருப்பது
ஒரே வஸ்து






எல்லோருள்ளும்
எல்லா உயிர்களுக்குள்ளும் இருப்பது
அந்த பரமாத்மாவான ஸ்ரீ வாசுதேவன் தான்
என்றும்  அவனுக்கு நமஸ்காரம்
என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறுகிறது.






ஆதி சங்கரரும் பரமேஸ்வரனே அவருக்கு
கள் கலயத்தை கையில் ஏந்தி நாலு வேதங்களின்
வடிவமான நாய்களுடன் அவர் எதிரில் தோன்றி
காட்சி தந்து அவருக்கு அருளிய உபதேசத்தை
தனது  மனீஷா பஞ்சகம் என்ற நூலில்
இந்த உடல் என்னும் கூட்டிற்குள் இருக்கும்
ஆத்மா வஸ்துவை நான் வணங்குகிறேன்
என்று கூறுகிறார்(விளக்கம் வேண்டுவோர் https://groups.google.com/forum/#!msg/mintamil/fsz16eyJOh4/shveOeNsdnQJ
இந்த இணைப்பில் சென்று
அதன் பொருள் அறியலாம்


ஆனால் அந்த உண்மையை
உணர்ந்தவர்கள் உலகில் பலர் உண்டு.

அப்படிப்பட்டவர்கள் எத்தனையோபேர்
இந்த உலகையும், உலகமக்களையும் கரையேற்ற
அவரவர்களுக்கு உரித்தான வழியில் அயராது
ஆன்மீக பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் மாதா அம்ருதானந்தமயீ
அவர்களின் பணி மகத்தானது.

மீனவ குலத்தில் பிறந்த பெண்மணி.
அன்னை சாரதாதேவிபோல் வாழ்வில்
இறைவன் அளித்த பல நினைத்து
பார்க்க முடியாத கடும் சோதனைகளை
எதிர்கொண்டு,இறைவன் அருளால்
தேர்ந்து தெய்வீக தரிசனம் பெற்று
இன்று தவறான வழியில் சென்று விட்ட
இந்த மானிடம் நன்றாக வாழ வழி கட்டும்
கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.

இந்த உலகில் உள்ள அனைவரையும், அது குழந்தைகளாகட்டும்,பெரியவர்களாகட்டும்,
எந்த,நாடு,எந்த மதம் என்று பாராமல்
அரவணைத்து உயிர்களையும் நேசித்து
அன்பு காட்டும் தெய்வீகபெண்மணி.

ஒரு அரசு செய்யமுடியாத தர்ம காரியங்களையும்,
துயர் துடைப்பு பணிகளையும் தனி மனிதராக
அனைத்து நல்ல உள்ளங்களையும் ஒன்றிணைத்து
உலகெங்கிலும்உள்ள  பல நாடுகளுக்கு வருடம்
முழுவதும் சுற்று பயணம் பல
ஆண்டுகளாக  சென்று தனது
தெய்வீக கானங்களினால் மக்களை
அன்பினால் ஒன்றிணைத்து ஆன்மீக
செல்வத்தை வாரி வழங்கும் வள்ளல் அவர்.

அவர் போல் இன்று வருடம் முழுவதும்
சளைக்காமல் ஆன்மீக பணி செய்பவர்கள்
இன்று உலகில் யாரும் இலர்.





அன்பின் வடிவமாக,
வற்றாதஆற்றலின் சக்தியாக
கோடானகோடி மக்களின்
துன்பங்களை துடைக்கும் தாயாக ,
பல்லாயிரக்கணக்கான சாதகர்களின்
ஆன்மீக குருவாக விளங்கும்
அவளை வாழ்வில் ஒரு முறையாவது
தரிசிப்பது அவசியம்.

சிலர் ஏற்கெனவே ஒரு குருவை
தம் வழிகாட்டுதலாக வைத்திருப்பதால்
இவரை ஏன் தரிசிக்க வேண்டும்
என்று நினைக்கலாம்

இவர் ஒன்றும் யாரையும்
மத மாற்றம் செய்யும் போதகரல்ல

இவரை தரிசிப்பதால்
அன்பின் உண்மையான பரிமாணத்தை
நாம் நிச்சயம் உணரமுடியும்.

அது நம் வாழ்வில் அமைதியையும்
ஆனந்தத்தையும் அருளும்
என்பதில் ஐய்யமில்லை.

மாதா அம்ருதானந்தமயி

மாதா அம்ருதானந்தமயி








அம்மா !
உன் புன்னகை  பூத்த
தெய்வீக முகம்
புண்பட்ட மனங்களின்
காயங்களை ஆற்றும்

மனித குலத்திற்கு
நீ ஆற்றும் புனித
பணிக்கு அனைவரையும்
உன்னிடம் கொண்டு சேர்க்கும்

அகில உலக
மக்களையும் அரவணைத்து
காக்கும் அன்னையே
அடிபணிந்தோம் உன் பாதம்

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள்.

மாதா அம்ருதானந்தமயி 
அருளுரைகள். 


அக்கிரமமும் ஊழலும் 
நம்பிக்கையின்மையும் நிறைந்த 
இன்றைய உலகிற்கு ஒளி வழங்கும் 
நட்சத்திரம் அம்மா 

இன்று நாம் சுமந்து நிற்கும்
வாழ்க்கை ப்ராரப்தங்களை
பரமாத்மாவிடம் சமர்ப்பித்துவிட்டு,
தியாகமென்னும் பாத்திரத்தை
தோளில் சுமக்க வேண்டும்.

இயற்கையை நோக்கும்போது
அது இப்போதும் அமைதி
அடையவில்லை
என்றுதான் கூறவேண்டும்.

நம் அனைவரின்பிரார்த்தனை    என்னும்
தென்றல்தான் கூடியிருக்கும்
கார்மேகங்களைக்  கலைக்க முடியும்

இந்த நிமிடம்தான்
நம் கையில் உள்ளது.

அடுத்த மூச்சு கூட
நம் சொந்தமில்லை

வண்ணத்து பூச்சியின்
வாழ்நாளொரு தினம்தான்

இருந்தபோதும் அது
சந்தோஷமாக பறந்து திரிகிறது.

அதுபோல்தான் நாம்
சந்தோஷமாக வாழ வேண்டும்.

பயம் இருக்கும் இடத்தில்
சந்தோஷம் இல்லை  

Sunday, June 23, 2013

இறைவன் பாரபட்சமற்றவன்

இறைவன் 
பாரபட்சமற்றவன் 

இறைவன் பெயரால்
மோசடி செய்யாதீர்

இறைவன் பெயரை வைத்து
விளம்பரம் தேடாதீர்

இறைவன் வியாபார
பொருளல்ல

இறைவனிடம்
பேரம் பேசாதீர்

அவன் நாம் கேட்டதையெல்லாம்
கேட்டவுடன் கேட்டபடி
வாரி வழங்கும் வள்ளலுமல்லன்

நாம்  பிறருக்கு கொடுத்தால்தான்
அது நமக்கு திரும்பிவரும்.

அது நன்மையோ தீமையோ
தப்பாமல் வரும்

அந்த செயல்பாட்டை
சரியாக செயல்பட செய்பவர்கள்தான்
கோள்களின் நாயகர்கள்

இறைவன் தவறு செய்பவர்களை
தடுப்பதில்லை.

ஏன்.தெரியுமா?

எது தவறு, எது அதர்மம் என்று அவனும்
அவன் அடியார்கள் மூலமும் நமக்கு தெளிவாக
காட்டியிருக்கிறான் அவதாரங்கள் மூலமும்
சாத்திர,இதிஹாச, நீதி  நூல்கள் மூலமும்

அதை உணர்ந்து அதன்படி
வாழ நமக்கு அறிவும்
சக்தியும் அளித்திருக்கிறான்

அதனால்தான் அவன்
தவறு செய்பவர்களை தடுப்பதுகிடையாது .

அதன் விளைவுகளை மனித குலம்
அனுபவித்துதிருந்த விட்டு விடுகிறான்

யாராயிருந்தாலும்
அவரவர் செய்த வினைகளின்
விளைவுகளிலிருந்து தப்ப முடியாது.

தண்டனைகளை ஏற்றுக்கொண்டு
அனுபவித்துதான் ஆகவேண்டும்.

இறைவன் பார பட்சம்
பார்ப்பதில்லை.

தவற்றை உணர்ந்து அவன் பாதம்
சரணடைந்தால் உரிய நேரத்தில்
காப்பாற்றுவான்.

இறைவனை மறவாதீர்
அவன் இல்லைஎன்று பிதற்றாதீர்.





முருகா உன் நாமம் வாழ்க

முருகா உன் நாமம் வாழ்க 























அழகென்ற சொல்லுக்கு முருகா
உன் அழகின்றி உலகிலே
பொருளேது முருகா

ஞானக்கனியாம்உனக்கு
மாங்கனி கிடைக்காமையினால்
கயிலைமலையிலிருந்து
எம் போன்ற பக்தர்களுக்காக
தணிகை மலையில்
வந்து நின்று அருள் செய்த முருகா

வேலை வணங்குவதே
எங்கள் வேலை என்றுணர்த்தவே
கையில் வேலை தாங்கி எங்கள் முன்
நின்றனையோ  முருகா

ஐம்புலனும் அறிவும் ,உடலின்கண்
விளங்கும் ஆறாதார சக்திகளுமாய்
நீ விளங்குவதை உணர்த்தும் வகையில்
ஆறுமுகம் கொண்டு காட்சி
தந்தனையோ முருகா

பல்வேறு கோலம் கொண்டு
அறு படை வீடுதன்னில்
வள்ளி தெய்வானையுடன்
காட்சி தரும் முருகா
வாழும் காலமெல்லாம்
உன் நினைவோடு
வாழ அருள் புரிவாய்.

முக்திக்கு வித்தான கந்தா
சக்தியின் வேல் தரித்த வேலா
துன்பம் துடைக்கும் தூயவா
வெற்றியை தரும் விமலா
என்றென்றும் என் நாவில்
நடமாடட்டும் உன் நாமம்

ஸ்ரீ இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி

ஸ்ரீ  இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி 





முருகா! சொல்ல சொல்ல
இனிக்குதடா உன் நாமம்

கண்ணால் உன் வடிவம்  கண்டாலே
கவலைகள் மறையுதடா

சொன்னாலே போதுமடா
விலகிடும் பாவம்

எண்ண எண்ண  ஏற்றம்
வருகுதடா வாழ்வில்

என்றென்றும் துணையிருப்பாய்
எப்போதும் என்னுடனே.

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(92)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(92)








திரிபுரசுந்தரியன்னையே !
உனது  திவ்விய வடிவைக் காண எனக்கு 
வாய்ப்பு கிடைத்ததம்மா !

கீர்த்தனை(481)-சுந்தரி நீ திவ்விய ரூபமு நு ..
ராகம் -கல்யாணி தாளம்-ஆதி 

ஸ்வாமிகள் திருவொற்றியூரில்  
உறையும் திரிபுரசுந்தரி அன்னை மீது 
இயற்றிய அருமையான கீர்த்தனை

திரிபுரசுந்தரியன்னையே !
உனது  திவ்விய வடிவைக் காண
எனக்கு வாய்ப்பு கிடைத்ததம்மா !
மென்னடையாளே !
இது உன் அருட்பார்வையின் பலனோ?

அல்லது நான் முன் செய்த பூஜையின் பயனோ?

இப்புவியில் சிறப்புற்ற ஆதிபுரமென்னும்
திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும்
 உன் திருவழகைக் கேள்வியுற்று பிரம்மன்
முதலிய தேவர்கள் ஒன்றுகூடி வெள்ளிக்கிழமையன்று
உன் தரிசனம் கிடைக்குமாவென்று ஏங்கி மனக்கரைந்து
வானுலகில் பதறும்பொழுது எளியவர் துயர் தீர்ப்பவளாகிய
உன் வடிவைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது

இக்கலியுகத்தில் எளியோரைக் காப்பவள் நீயே
என்று சபை கூடுமிடங்களெல்லாம் புகழ்வேன்.

இனிய குணங்கள் நிரம்பிய கருணைக் கடலே!
உனக்கு நிகர் யார் உளர்?

களைத்து வந்திருக்கும் என் மனம் நிம்மதிடையுமாவென்று
 நான் இருக்கையில் கலகலவென்று தேவ ஸ்திரீகள்
வரிசையாக வந்து உன்னை வணங்கும் இனிய
வெள்ளிக்கிழமை  சேவை எனக்கு கிடைத்தது

என்னைப் பெற்ற தாயே
என் ஜன்மமே இன்றுதான்
பயனுடையதாக  ஆயிற்று
இன்று பரம  ஏழைக்குச் செல்வம் கிடைத்தது போலவும்
,என் கண்கள் பேறு பெற்றதுபோலவும் உன் தரிசனம் கிடைத்தது

தாமரைக் கண்ணியே!
நன்மை புரிபவளே!
மன்மதனைப் பெற்ற திருமாலின் சோதரி!
தியாகராஜனின் (சிவனின்)மனதை வசீகரித்தவளே!
கௌரி !

அன்னையின் தரிசம் பெற்ற மகிழ்ச்சியை 
எப்படி இந்த கீர்த்தனையில் ஸ்வாமிகள் 
வெளிப்படுத்தியிருக்கிறார் 
என்பது கவனிக்கத்தக்கது 


தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (91)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (91)


















என் தெய்வமாகிய இராமனுக்கு 
சமானமாகக் கூறுவதற்குக் 
கடவுள்களுள் ஒருவரும் இலர். 

கீர்த்தனை(370)-சாமிகி  சரி செப்ப ஜால ....
ராகம்-பேகட -தாளம்-ரூபகம்.

என் தெய்வமாகிய இராமனுக்கு
சமானமாகக் கூறுவதற்குக்
கடவுள்களுள் ஒருவரும் இலர்.

என் மனம் அவனுடனே
ஒன்றிவிட்டது

வேறு யோசனை எதற்கு?
இதுவே போதும்

அவரவர் விதிப்படி
எல்லாம்  நடக்கும்

என் தெய்வம் பேசினால்
அதுவே எனக்கு பெரும் பேறு

அதுவே பதினாயிரம் பாக்கியம்

என் கண்களுக்கு அவன்
தோற்றமே அழகு தருகிறது

கொடுத்த வாக்கை
மீறாதவன் அவன்

என்றும்
அன்பு காட்டுபவன்

குளிர்ந்த பார்வையுடன்
நோக்குபவன்

தேவர்கள் அனைவரிலும்
அவனுக்கு இணை இல்லை
அவன் என்னைக் காக்கும் பெருமான்.

மிக அருமையான கீர்த்தனை.

தன்  இஷ்ட தெய்வமான இராமபிரானுக்கு
சமானமாக எவரும் இல்லை
என்பதற்கான காரணங்களை கூறுகிறார். ஸ்வாமிகள்.

அப்படிப்பட்ட மகிமை பொருந்தியவனை
நாமும் நம்பிக்கையுடன் ஆராதித்து
அவன் அருளை பெறுவோம்.

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள்.

மாதா அம்ருதானந்தமயி 
அருளுரைகள். 




























ஒரு மனிதன் உலகியல் வாழ்வில்
பல துறைகளில் சிறந்து விளங்கக் கூடும்.
ஆனால் ஆன்மீக கல்வியில்
அவன் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறான்

அக்கல்வியைப் பெற வேண்டுமெனில்
அவன் குருவிற்கு தலை
வணங்கியே ஆகவேண்டும்

ஒரே திறவுகோலால்
எல்லா பெட்டிகளையும் திறக்க முடியாது

தலை வணங்காத இயலாத காலம் வரை
ஆன்மீக கல்வியில் ஒரு அடி கூட முன்னேற முடியாது.

இறைவனை அடையவேண்டும்
என்ற விருப்பத்துடனும்களங்கமற்ற மனதுடனும்
நாம் குருவிடம் சென்றால் அவர் கூறுபவைகளை
சரியாக புரிந்துகொள்வதில் தடை ஏதும் இருக்காது

ஆன்மீகக் கல்வியென்னும் பெட்டியைத்
திறப்பதற்குரிய திறவுகோலாகத் திகழ்வது
களங்கமற்ற தன்மையும், குருவிடம் சீடனுக்குள்ள
அர்ப்பண  மனோபாவமுமே ஆகும்

இறைவனை அடைவதற்குரிய உண்மையான
விருப்பமும் பிறரிடம் பணிவாக் நடந்து கொள்வதும்தான்
ஒரு சீடனுக்கு தேவையான் அடிப்படை குணங்கள் .

இவைகளை நாம் வளர்த்துக்கொண்டாலனைத்தையும்
ஏற்றுக்கொள்ளும் திறமையைப் பெறுவோம்.

அத்துடன் நாம் முழுமை அடைகிறோம்.

 நம்மை அறியாமல் நம் உள்ளே
ஆத்மஞானம் நிறையும்.

matruvani-2005

Saturday, June 22, 2013

எப்படி இருந்த நான் ......

எப்படி இருந்த நான் ......















இப்படி ஆயிட்டேன் பார்த்தீங்களா 















என் நிலையே இப்படியென்றால்
உங்கள் நிலை எப்படி ஆகும்?

சிந்தியுங்கள். 
ஹரியையும் அரனையும்
அனுதினமும்  நினையுங்கள்

அறவழியில் பொருளீட்டி
அனைவருடன்
அன்போடு வாழுங்கள்.

கேதார்நாத் சம்பவம் -ஒரு பாடம்

கேதார்நாத்  சம்பவம் -ஒரு பாடம் 












அன்பே சிவம் 

ஆனால் அவன் படைப்புக்கள் 
அவனின் மற்ற படைப்புகளிடம் அன்பு 
பாராட்டாவிடில் அவனே அம்பாக மாறி 
அவர்களை அழித்திடவும் செய்வான்

அதுதான் சமீபத்தில்
கேதார்நாத்தில் நடந்த நிகழ்வு

கேதார்நாத் என்பதின் பொருள் என்ன? 

கே (கேளுங்கள் ) ஆதார்நாத (ஆதார நாதமாகிய ஓம் என்னும் ஒலியை) என்று பொருள் .

அந்த இடம் வழிபாடு செய்ய மட்டுமே 

வயிற்றுப்பாட்டை கவனிக்கும் இடம் அல்ல 

அது சிவனின் இடம்.
அங்கு யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை .
இன்று அவன் மட்டும் நிற்கின்றான்

அவனை சுற்றி சொந்தம் கொண்டாடியவர்கள் 
அனைத்தையும் இழந்து நிற்பதே இதற்கு சான்று.


வருவோர் போவோரிடம் வாங்கி வாங்கி 
சேர்த்த காசெல்லாம் காணாமல் 
போய் விட்டதல்லவா இன்று  

இனியாவது சிவ சொத்து குல நாசம்
என்பதை இந்த மூட ஜன்மங்கள் 
புரிந்து கொண்டால் நல்லது.

ஆனால் இந்த நிகழ்விற்கு
அரசின் மீது குறை கூறுகின்றன
 குறை பிரசவங்கள்.

கலப்பட சந்தனத்தை அபிஷேகம் என்ற பெயரில் 
அவனுக்கு அளித்ததை வெறுத்துத்தான் 
பூமகளின் புனிதமான சேற்று குழம்பை தன் 
உடலில் ஆசை தீர பூசிக்கொண்டான் போலும்.

நதிகளில் கழிவுகளை விட்டு அசிங்கபடுத்திய
ஜீவன்கள் அளித்த அபிஷேக நீரினால்
ஏற்பட்ட களங்கத்தை போக்கவே
மேகத்தை உடைத்து முழு நீரையும்
தன் சிரசில் ஊற்றி கொண்டான் போலும்.

தெள்ள தெளிந்த ஜீவனுக்கு
அவன் சிவ லிங்கம் 

தெளியாதவர்கள் தெளியும்வரை  
கேதார்நாத் போன்ற இடங்களில்தான் 
அவனை தேடவேண்டும். 

இந்த உலகம் பரந்தது.
அதில் குடியேற ஏராளமான இடம் உள்ளது.
இனியாவது இறைவன்
சொத்தில் கை வைக்காதீர்.
சொந்த பந்தங்களே இல்லாமல் செய்திடுவான்.

அவனோ அகோர மூர்த்தி 

இருப்பினும் அக்கிரமங்களை காண சகியாதுதான் 
அவன் ஆடினான்  கோர தாண்டவ மூர்த்தியாக 

அவன் ஆடிய தாண்டவத்தில் பலியானோர்
அவன் திருவடி அடைந்திருப்பார்
அவனை அந்த நேரத்தில் நினைத்திருந்தால்.

தப்பி பிழைத்தவர்கள் இனி இவ்வுலகில் 
உள்ள காலம் வரை அவன் திருநாமத்தை 
நெஞ்சில் நிறுத்தி பிறரை நிந்தனை செய்யாமல் 
அன்பு நெஞ்சம் கொண்டு வாழ்வதுதான் 
அவனுக்கு ஆற்றும் நன்றிக்கடன் 


சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள் 
















அன்பே சிவம்
சிவ சக்தி ஸ்வரூபமே இந்த உலகும்
அதில் உள்ள உயிர்களும்.


அந்த பரமேஸ்வரனை நம்புங்கள்
அவனை அனு தினமும் தொழுங்கள்
அவரவர்க்கு விதிக்கப்பட்ட கர்மங்களை
விடாது அனுஷ்டியுங்கள்.

ஆணவத்தை  விட்டிடுங்கள்.
ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள்
சாத்திரங்களை குறை கூறாதீர்கள்.
என்றும் அதை மீறாதீர்கள்.

எல்லா தெய்வங்களும் ஒரே
பரம்பொருளின் வெவ்வேறு
வடிவங்கள் என்பதை உணர்ந்து
கொண்டு வழிபாடு செய்யுங்கள்.

ஒழுக்கமாக வாழுங்கள்
புறங்கூறி திரியாதீர்கள்

அனைத்து உயிர்களிடமும்
அன்பாய் இருங்கள்

இனியும் திருந்தாவிடில்....

இனியும் திருந்தாவிடில்....




























நன்றி கெட்ட மாந்தர்களே 
இனி உங்களுக்கு அழிவுதான்!

புண்ணிய பூமியாம் பாரதத்தில்
வாழும் புவி மாது நான் 

நீங்கள் வாழ உடல் தந்தேன் 
உடலில் உயிர் தங்க காற்று தந்தேன்
சுவையான  நீர் தந்தேன், உணவு தந்தேன், 
இனிக்கும் கனிகள் தந்தேன் 
மணக்கும் மலர்கள் தந்தேன் 
அனைத்தும் இலவசமாய். 

என்தங்கை  ஸ்ரீதேவியோ 
அஷ்டர்வையங்களையும் 
தந்தாள் நீங்கள் மகிழ்வோடு வாழ
அனைத்தையும் இலவசமாய்.  

மாலவனோ மலைமீது நின்று கொண்டு 
கண்ணிமைபோல் காக்கின்றான் 
உங்களை இவ்வுலகில் வாழும் காலம் வரை. 
தன்னை பயன் ஏதும் எதிர்பாராது 
வழிபடுபவருக்கு முக்தியும் தருகின்றான் 

ஆனால் நன்றி கெட்ட மனித குலமே
அகந்தையின் உச்ச கட்டத்தில் 
இறைவனே இல்லை என்றும். 
நீங்கள் பிதற்றும் பேச்சையும் 
சுயநலம் கொண்டு பிறர் சொத்தை 
அபகரிக்கும் உங்கள் செயலையும் 
இனிமேலும் நாங்கள் அனுமதியோம். 

இனி உங்கள் அழிவு காலம்தான்
வெள்ளமென வருவோம்,புயலாய் வீசுவோம்
அனலென காய்வோம்,ஆழி பொங்கி 
அனைத்தையும் விழுங்குவோம். 
இனியும் திருந்தாவிடில். 

Friday, June 21, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(90)

தியாக ராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(90)


























இராமா 
நீ மறுமொழி கூறாமலிருப்பதேன்?

கீர்த்தனை(211)-மாறுபல்க குன்னா வேமிரா ...
ராகம்-ஸ்ரீரஞ்சனி-தாளம்-ஆதி 

திருமகளின் மனத்திற்க்கினியவனே1

நீ மறுமொழி கூறாமல் இருப்பதேன்?

அயோத்தியில் உறைபவனே!

விட புருடரையும் ,திருடர்களையும்
போற்றி நான் பஜனை செய்தேனா?

வெகுதூரத்திலும்,(சமீபத்தில் )
என் இதயத்தாமரையிலும்
அமர்ந்திருக்கும்  உன்
வழியை அறிந்து மகிழ்சியுற்றிருக்கும்
எனக்கு (நீ மறுமொழி கூறாமலிருப்பதேன்?)

மிக இனிமையான கீர்த்தனை 

இராமபிரானைத் தவிர
வேறு சிந்தனையற்றிருக்கும் ஸ்வாமிகள்
தனக்கு அவன் இன்னும் அருள் செய்யாமல்
தாமதம் செய்தமையால்
மேற்கண்டவாறெல்லாம்
கேள்விகளை எழுப்புகிறார்.

நாம் முதற்கட்டத்தில் இறைவன்
எங்கோ இருப்பதாக
எண்ணித்தான் வணங்குகிறோம்.

 நமக்கு ஞானம் வரும்போது
அவன் நாம் உள்ளத்திலே உறைகின்றான்
என்பதை உணருகின்றோம்.

மேலும் நாம் தீயவர்களையும்,
பிறர் சொத்தை அபகரிப்பவர்களையும்
எந்த காரணம் கொண்டு
அற்ப ஆதாயங்களுக்காக போற்றலாகாது.

அதனால் கிடைக்கும் நன்மைகளை விட
தீமைகள் தான் அதிகம் உண்பதை
உணர்ந்துகொள்ளவேண்டும்.

பிறவிக் கடலில் விழுந்து தவிக்கும் நம்மை
காப்பாற்றி கரைசேர்க்கும் இறைவனைதான்
நாம் முழு மனதுடன் வழிபடவேண்டும்.

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (89)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (89)
























இராமா 
உன்னைப் போல்
 நாட்டை ஆண்டவர்கள் உண்டா? 

கீர்த்தனை(198)-காருபாரு சேயுவாரு...
ராகம்-முகாரி-தாளம்-ஆதி 

ஊர் மக்களும் ,தேச ஜனங்களும், மகரிஷிகளும்
பரமானந்தமடைந்து சர்வ மங்களமும் பெற்று
வாழுமாறு சாகேதநகரத்தை (அயோத்யா புரியை)
உன்னைப் போல் அரசு புரிபவர்கள் உளரா?

மாதம் மும்மாரி பொழிய ,பிரஜைகள் சகல
வித்தைகளையும் கற்று ,நீண்ட ஆயுளைப்
பெற்று,கோபம் ,கர்வம், முதலியன
அற்றவர்களாக  வாழவில்லையா?

தியாகராஜன் தொழும் இராம !

ஆஹா படிக்கவே
எவ்வளவு இன்பமாக இருக்கிறது.

இராமபிரான் தர்மத்தின் வடிவம்.

தர்மம் ஆட்சி செய்தமையால்
மாட்சிமை பெற்று விளங்கியது நாடு.

அரசன் எவ்வழியோ குடி மக்களும்
அவ்வழி என்பார்கள்.

அதனால் மக்களும்
நல்லவர்களாக திகழ்ந்தார்கள்

இயற்கையோடு இயைந்த வாழ்வு
அனைவருக்கும்
இன்பம் தந்தது.

ஆனால் இன்று ஆள்பவர்கள்
எல்லாம் ஒழுக்கம் தவறியவர்கள்

,மக்களை சுரண்டி
கொழுப்பதில் வல்லவர்கள்.

 மக்களை பிச்சைக்காரர்களாகவே
இருக்க வைத்து அவர்கள் மட்டும்
வாழ வழி தேடும் புண்ணிய புருஷர்கள்.

வருமானத்திற்க்காக
குடிமக்களை குடிகாரர்களாக்கி
தாங்கள்  மட்டும் சொகுசு கார்களில்
வலம் வரும் மக்கள் விரோத
போக்கு கொண்ட ஆளும் வர்க்கம்.

சுயனலத்திர்க்காக
இயற்கை வளங்களை அழிப்பவர்கள்.

அதனால்தான் ஆண்டுதோறும்
ஒன்று மழை அபரிமிதமாக பெய்து
அனைத்தையும் அழிக்கிறது.
அல்லது காய்ந்து கெடுக்கிறது.

நாம் என்ன செய்ய முடியும்?

நம் மனதிர்க்குள்ளாவது
அந்த இராம பிரானின் ஆட்சியை
அமைக்க முயற்சி செய்வோம்.

அதற்கு அவன் திவ்ய நாமத்தை
விடாது சொல்லுவோம்.

Thursday, June 20, 2013

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள்

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள் 





























கேள்வி:விஞ்ஞானிக்கும் ஞானிக்கும் 
என்ன வேறுபாடு ?

பதில்:ஒரு விஞ்ஞானி அக உலகை
விட்டு விட்டு புற உலகையே பார்க்கிறார்.

பூரணத்தை (சமஷ்டியை)விட்டு விட்டுப்
பகுதிகளில் (வ்யஷ்டியில்)
அவரது கவனத்தை செலுத்துகிறார்.

புற உலகத்திலேயே அவர்
கவனம் மூழ்கியிருப்பதால்
அக உலகத்தை பற்றிய
முழு அறிவு அவருக்கு இல்லை

அவரிடம் பல சீரிய கருத்துக்கள்  இருக்கலாம்,
குணங்கள் இருக்கலாம் ,கருத்துக்கள் இருக்கலாம்.
கூறிய மதி நுட்பம் அவருக்கு இருக்கலாம்
ஆனால் அவரது அன்பு விஞ்ஞானத் துறைக்கு
 மட்டும் ஒதுங்கிவிடுகிறது

அனைத்தையும் தழுவி நிற்கும் பேரன்பு அல்ல.அது.
உண்மையான ஒரு விஞ்ஞானி அன்பு உள்ளவராக ,
மனித குலத்தையும் உலகில் உள்ள அத்தனை
உயிரினங்களையும் நேசிப்பவராக இருக்கவேண்டும்.

ஆனால் ஒரு மகான் அல்லது ஒரு ரிஷிதான்
உண்மையான அன்பு படைத்தவர்.
ஏனென்றால் அவர் தன் ஆத்மாவின்
உள்ளே ஆழ்ந்து சென்று உயிர் மற்றும்
அன்பும் அடிப்படையை அறிந்துள்ளார்.

அன்பையும் உயிரையும் அவர் எங்கும்
மேலே ,கீழே,முன்னே, பின்னே, எல்லா
திசைகளிலும் அனுபவிக்கிறார்.
பாதாளத்திலும் ,நரகத்திலும் கூட
அவர் உயிரையும்  அன்பையுமே உணர்கிறார்.

அவரைப் பொறுத்த வரையில் எல்லாத்
திசைகளிலும் அன்பும் உயிருமே எங்கும்
ஒளிபரப்பிக் கொண்டு அற்புதமாக மிளிர்கிறது.

அவர் தனது உள்ளாமாகிய பரிசோதனைக் கூடத்தில்
சோதனைகள் செய்த கொண்டிருக்கிறார்
மக்களின் வேதனைகளை எவ்வாறு மாற்றுவது என்று.

அவர் உயிரை பிரித்து பார்ப்பதில்லை
பூரணமானதாகக் காண்கிறார்.
(இதைதான் அவ்வை மூதாட்டி
ஒன்றாக காண்பதே காட்சி 
என்று சொல்லியிருக்கிறார்) 

அந்த பூரணமான   அன்பிலும்
உயிரிலும் அவர் வாழ்கிறார்.

எனவே அவர்தான் உண்மையான
விஞ்ஞானி என்பது அம்மாவின் கருத்து.

உண்மையான விஞ்ஞானியான
ஒரு ரிஷி வாழ்வை அன்புடன் தழுவி
அத்துடன் ஒன்றாக இணைந்து விடுகிறார்.
அவர் போராடுவதில்லை.

ஆனால் ஒரு உலகியல் விஞ்ஞானி
வாழ்க்கையுடன் போராடி அதை
வெற்றி கொள்ள முயல்கிறார்.
(போராடி தோல்விதான் அடைகிறார். 
அவர் பெறும் வெற்றி நிலைப்பதில்லை. 
மீண்டும் அவரோ அல்லது  மற்றொருவரோ 
ஒரு புதிய பிரச்சினைக்காக ஆராய்ச்சியை 
தொடர வேண்டும். இதற்கு முடிவேயில்லை) 

மகானோ அதைச் சரணடைந்து
அதன் போக்கில் தன்னை அழைத்துச்
செல்ல விட்டுவிடுகிறார்.

நாமும் நம் அகந்தையை 
ஒதுக்கி தள்ளி விட்டு 
குருவின் பாதங்களை 
சரணடைவோம்
உண்மையான, நிலையான ,நீடித்த 
இன்பத்தை அடைவோம். 

(நன்றி-மாத்ருவாணி புரட்டாசி -2005 )

மாதா அம்ருதானந்தமயியின் அறிவுரைகள்.

மாதா அம்ருதானந்தமயியின் அறிவுரைகள். 

உண்மையான அன்பு
இதயத்தில் இருக்கிறது







இதயத்தில் இருக்கும் அன்பை
விளக்கி சொல்ல முடியாது

அதை வார்த்தைகளாக
வெளிப்படுத்த முடியாது

.இதயம் வார்த்தைகளுக்கான இடம் அல்ல.
 வார்த்தைகள் அறிவிற்கு உரியவை .
அறிவு பேசமுடியும்.

ஆனால் அது ஒரு ஒலிப்பதிவு
கருவியைப் போன்றதே
அது வார்த்தைகளை பதிவு செய்து
அதே வார்த்தைகளை வெளியே
தள்ளிக் கொண்டே இருக்கிறது.


அந்த வார்த்தைகள் உணர்வற்ற
வெறும் வார்த்தைகள்.

அறிவினால் கருணையை
உணர முடியாது

அன்பையும் கனிவையும்
அறிய முடியாது

ஏனெனில் அறிவு காரணத்தை
கண்டுபிடிக்க முயலுகிறது

அன்பையும் கருணையும் கூட
அது ஆராய்ந்து பார்க்கிறது

மகனே எங்கு அளவுக்கு மீறிய
பேச்சு இருக்கிறதோ
அங்கு அன்பு இருக்காது.

அன்பு பெருகும்போது
எண்ணங்கள் மறைகின்றன.

உண்மையான அன்பு நிறைந்தவர்
ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிவிடுகிறார். .

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(88)

தியாகராஜ  சுவாமிகளின் 
சிந்தனைகள்(88)



























அன்னை திரிபுரசுந்தரியே!
உன் பக்த கோடிகளுள் என்னையும்
கடாட்சித்து காப்பாற்று.

கீர்த்தனை(477)-சுந்தரி  நந்நிந்த ரிலோ..
ராகம்-பேகட -தளம்-ரூபகம். 

ஸ்வாமிகள் திருவொற்றியூரில் திரிபுரசுந்தரியை 
தரிசித்தபோது இயற்றிய கீர்த்தனை 

அன்னை திரிபுரசுந்தரியே!

உன் பக்த கோடிகளுள் என்னையும்
கடாட்சித்து காப்பாற்று.

மதிவதனியே!
இது இரைச்சலென்று
கருதித் தாமதம் செய்யாதே

பால திரிபுரசுந்தரி!
தேவர் குழாம்களைக் காப்பவளே!
பிரபஞ்சத்தை விளையாட்டாக படைத்தவளே!
நெற்றியில் திலகமணிந்தவளே!
உன்னிடம் பக்தி செலுத்துவதே சிறந்தது

உன் கருணை வராததேன் தாயே?
சரஸ்வதியால் வணங்கப் பெறுபவளே!
கரத்தில் கிளியை ஏந்தியவளே!
ஆதி சேடனை யொத்த சடையை உடையவளே!
லலிதே !
மங்களம் பொருந்தியவளே!
பரமசிவன் நாயகியே!
இன்மொழியாளே !

உன்னை நம்பினேன்
மலர்க் கூந்தலுடைய தாயே!
சமுத்திர ராஜன் துதிக்கும் கம்பீரமுடையவளே !
திருவொற்றியூரில் விளங்குபவளே !
எளிய மாந்தரின் ஆதாரமெ!
மலையரசன் மகளே!

கொடிய கர்மங்களை அகற்றுபவளே!
தியாகராஜன் நாடும் அன்னையே !

மிக அருமையான  பிரார்த்தனை பாடல். 
அன்னையை அனுதினமும் 
துதித்து அருள் பெறலாம். 

Tuesday, June 18, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(87)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(87)

ஸ்ரீ ரகுவர!
நகை தவழும் உன் திருமுகத்தைக் காண முடியாத 
என் துயரத்தை யறிந்து நீ என்னைக் காக்கலாகாதா ?









கீர்த்தனை(142)-நகுமோமு கநலேநி-நாசாலி தெலிசி
ராகம்-ஆபேரி(மேள-22)-தாளம்-ஆதி 

அற்புதமான ,ரம்மியமான கீர்த்தனை. 

இந்த கீர்த்தனையை கேட்டு
தலையசைக்காதவர்கள் உண்டா?

இந்த கீர்த்தனையை கேட்டு
உள்ளம் நெகிழாதவர்கள் உண்டா?

இந்த கீர்த்தனையை பாடாத,
இசைக்காத கலைஞர்கள் உண்டா?

ஆனால் எத்தனை பேருக்கு
இந்த கீர்த்தனையின் பொருள் புரியும்?

பொருள் அறிந்து
ரசித்தால் எப்படி இருக்கும்?

நகை தவழும் உன் திருமுகத்தைக் காண முடியாத
என்  துயரத்தை யறிந்து நீ என்னைக் காக்கலாகாதா ?

ஸ்ரீ ரகுவர!
கோவர்தனகிரியைத் தாங்கியவனே!




உனது பரிவாரங்கள் அனைவரும் கிரமமான
உபதேசம் செய்பவர்கள் அல்லரோ!
அவ்விதம் இருக்கமுடியாதே!

பட்சி ராஜனாகிய கருடன் உன் கட்டளைக்கிணங்கி
வேகமாகப் பறந்து வரவில்லையோ?

அல்லது விண்ணிற்கும் பூமிக்கும்
 வெகுதூரம் என்று சாதித்து விட்டானோ?

உலகையாளும் பரமாத்மனே!
நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?

விரோதம் பாராட்டாதே
நான் தாள மாட்டேன்
என்னை ஏற்றுக்கொள்.

இறை தரிசனம் தாமதமாகிய நிலையில்
சுவாமிகளின் உள்ளம் எவ்வாறு துடிக்கின்றது
என்பதற்கு சாட்சி இந்த கீர்த்தனை.

நமக்கும் இறைவனின் தரிசனத்திர்க்காக
ஏங்கி தவிக்கும் உணர்வு உண்டாக
அவனிடமே பிராத்திப்போமாக