Monday, June 3, 2013

என்னே பேதைமை!

என்னே பேதைமை!






பாடங்களை உருப்போட்டு
தேர்வில் வேண்டுமானானாலும்
தேர்வு பெற்று விடலாம்

பாடங்களிலிருந்து
பாடம் கற்றுக்கொள்ளாதவன்
இந்த உலகில்
பொல்லாதவனாகதான் போகிறான்

கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களை
வாழ்வில் கடைபிடிக்காதவன்
வாழ்க்கை வீணே.

வாழ்நாள் முழுவதும் 
வயிற்று பிழைப்புக்காக 
கல்வி கற்க பல லட்சம் 
செலவு செய்கிறார்கள் 
இந்நாளில் மக்கள்

ஆனால் நமக்குஇந்த உலகில்
வாழ உடலுடன், உயிரையும் 
அறிவையும், சக்தியையும் 
சுற்றங்களையும்,மற்ற 
எண்ணிலடங்கா செல்வங்களையும்,
வசதிகளையும் நாம் 
எதுவும் கேளாமலே அளித்த 
அந்த இறைவனை சிந்தனை
செய்ய மட்டும் 
அவர்களுக்கு நேரம் இல்லை. 

என்னே பேதைமை!

இறைவனின் கருணையை நினைத்து 
அவர்களில் சிலர் இறைவனை 
போற்றாமல் போனாலும் போகட்டும் 
வாய்க்கு வந்தபடி தூற்றாமல்
கூட இருக்க  முடிவதில்லை 

இன்றுஆலயங்களில்  காசுக்காக
இறைவன் முன் காசு போடுபவர்களுக்கு
புரியாத ஒரு மொழியில்
போற்றி பாடுகிறார்கள்

அதையும் கவனமின்றி கேட்டுவிட்டு
தன் வேலைகளை பார்க்க
ஓடுகிறது மனிதர் கூட்டம்

கோயில் நிர்வாகங்களோ
பக்தர்களை ஆலயங்களுக்கு வருமாறு
விளம்பரங்கள் செய்யும்.

பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ
அவர்களுக்கு இணையாக ஆண்டிகளும்
பிச்சைக்காரர்களும் சமூக விரோதிகளும்
கூடுவது  கலி கால விசேஷம்.

மக்களை கூட்டுவதும்,கூடிய இடத்தில்
அவைகள் விட்டு சென்ற ஏராளமான 
குப்பை கூளங்களை அகற்றுவதும்தான் 
நடக்கிறது. 

மக்கள் தங்கள் மனதில் உள்ள குப்பைகளை 
அகற்ற மட்டும் நினைப்பதே கிடையாது.
மேலும் புதிது புதிதாக குப்பைகளை 
சேர்த்துக்கொண்டே போகிறார்கள். 

உணவை இட்டு நிரப்ப நிரப்ப
மனிதர்களின் தொப்பை பெருப்பதுபோல்
மனதிலும் குப்பைகள் சேர சேர
மனமும் கெட்டு நாற்றமெடுக்கும்
சிந்தனைகள் உருவாகி தரம் கெட்டு
போய் கொண்டிருக்கிறது மனித இனம்

காணுமிடமில்லாம் கோயில்கள்.
கோயிலை சுற்றியும் சாக்கடைகள்
குப்பை கூளங்கள்,மனித கழிவுகள்.

புறத்திலும் அப்படிஎன்றாலும்
அகத்திலேயும்அழுக்காறு
கரை புரண்டு ஓடுகிறது.

வள்ளுவன் சொன்னான்
புறத்தே உடலை சுத்தம்
செய்வது நீரென்றால் அகத்தே
மனதை சுத்தம் செய்ய உண்மை பேசுதலும்,
உண்மையாய் நடத்தலும் என்றான்.

ஆனால் இன்றோ உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசுவாரன்ரோ
மலிந்து விட்டனர் இவ்வுலகில்

மனதில் காம சிந்தனைகளை விடுத்து
இராம நாம சிந்தனைகளை நிரப்புவீர்
நீரும் உயர்வீர். இந்த உலகமும்
உருப்படும்.

Pic.courtesy-google images.

4 comments:

  1. /// இந்த உலகில் வாழ உடலுடன், உயிரையும், அறிவையும், சக்தியையும், சுற்றங்களையும், மற்ற
    எண்ணிலடங்கா செல்வங்களையும், வசதிகளையும்...///

    குறையும் போது தானே இறைவனின் சிந்தனை வருகிறது - இன்றைக்கு...!

    ReplyDelete
    Replies
    1. அப்போதாவது வந்தால் சரி DD

      Delete
  2. //ஆனால் நமக்குஇந்த உலகில் வாழ உடலுடன், உயிரையும் அறிவையும், சக்தியையும் சுற்றங்களையும்,மற்ற எண்ணிலடங்கா செல்வங்களையும், வசதிகளையும் நாம் எதுவும் கேளாமலே அளித்த அந்த இறைவனை சிந்தனை
    செய்ய மட்டும் அவர்களுக்கு நேரம் இல்லை.

    என்னே பேதைமை!//

    அருமையோ அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete