Sunday, June 2, 2013

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(10) யோகிகளும்

யோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(10)
யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும்(10)

ஞானத்தை அடைந்தவர்கள் ஞானிகள்
அதை அடைய துடிப்பவர்களுக்கு
வழங்க துடிப்பவர்களும் அவர்களே

உடல் மீது
மோகம் அற்றவர்கள்

உடலின் உள்ளே
உறையும் உத்தமனை
உணர்ந்தவர்கள்

அவர்களுக்கு
பாமரனும் ஒன்றுதான்
படித்தவனும் ஒன்றுதான்

அவர்களுக்கு பணிவிடைகளை
செய்பவர்களும் ஒன்றுதான்

அவர்களின் அன்பை புரிந்துகொள்ளாமல்
அவர்களை துன்புறுத்தும்
போக்கிரிகளும் ஒன்றுதான்

அவர்கள் கீதையில் கண்ணன் போதித்த
சமரச நோக்கு ஒன்றையே
குறியாக கொண்டவர்கள்.

அவர்கள் தாபத்தில் தவிக்கும்
மனித குலத்திற்கு
தாகத்தை தணிக்கும்
நீரூற்று போன்றவர்கள்.

பாவ சுமைகளை தாங்க முடியாமல்
துன்பக் கடலில் மூழ்கி கொண்டிருக்கும்
மாந்தர்களை கரையேற்ற வந்த தோணிகள்

வாழ்வின் அடித்தளத்தை
அடைந்து விட்ட மக்களை
மேலேற்றிவிடும் ஏணிகள்.

எதை அடையவேண்டுமோ
அதை அடைந்து விட்ட நிலையில்
அவர்களுக்கென்று எதுவும் தேவையில்லை

அவர்கள் மண்ணிலே புரண்டாலும்
மாளிகையிலே இருந்தாலும்
வைரங்கள்போல் புழுதியில் இருந்தாலும்
பட்டு துணியில் வைக்கப்பட்டிருந்தாலும்
எந்தவிதமான் ஆசா பாசத்திற்கும்
உட்பட மாட்டார்கள்.

எப்பேர்ப்பட்ட
உன்னதமான உயர்ந்த நிலை!

அதை நம்மைபோன்ற சாதாரணமான
உலக மோகத்தில் மூழ்கியுள்ள  மனிதர்களால்
கற்பனை செய்து பார்க்க கூட முடியாது.

இருந்தாலும் அந்த நிலையை
அடைவது சாத்தியமே.

அதற்க்கு சத்தியத்தில் நம்பிக்கை வைத்து
சத்திய வாழ்க்கை வாழ்ந்து ,
இறைவன் அருளால் பலவிதமான
கடுமையான சோதனைகளுக்கு
இறைவனால் உட்படுத்தப்பட்டு
அந்த ஜீவனுக்கு அந்த உயரிய
பதத்தை அளிக்கின்றான்.

அதன்பிறகு அந்நிலையில் என்றும்
குறையாத ஆனந்தத்தில் திளைக்கின்றனர்.

அவர்களை நாடும் உண்மையான
 சாதகர்களுக்கு வழி காட்டுகின்றனர்.

நம் நாட்டில் ஞானிகளுக்கு
குறைவில்லை.

எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் யோகிகளுக்கும் குறைவில்லை.

வாழையடி வாழை என அவர்கள்
இம்மண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

புண்ணியம் செய்தவர்களுக்கு
அவர்கள் தொடர்பு கிடைக்கிறது.

இருந்தும் அவர்களை உண்மையாக
புரிந்து கொண்டு ஞானத்தை தேடுபவர்கள்
மிக மிக அரிது.

பெரும்பாலானோர் அற்ப உலக பலன்களை
பெறுவதில் மட்டுமே
தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர்.

ஞானிகளின் வாழ்க்கை சரிதம்
அற்புதங்கள் நிறைந்தது.
சராசரி மனிதனின் அறிவுக்கு எட்டாதது.

இனி அப்படிப்பட்ட ஒரு ஞானியின்
வாழ்க்கை சரிதத்தில் நடந்த லீலைகளை காண்போம்.
தெளிவு பெறுவோம். (தொடரும்)



6 comments:

  1. /// உன்னதமான உயர்ந்த நிலை அடைவது சாத்தியமே... ///

    தொடருங்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அவர்கள் மண்ணிலே புரண்டாலும்
    மாளிகையிலே இருந்தாலும்
    வைரங்கள்போல் புழுதியில் இருந்தாலும்
    பட்டு துணியில் வைக்கப்பட்டிருந்தாலும்
    எந்தவிதமான் ஆசா பாசத்திற்கும்
    உட்பட மாட்டார்கள்.

    எப்பேர்ப்பட்ட
    உன்னதமான உயர்ந்த நிலை!

    அருமையான பகிர்வுகள் ..படிக்க
    ஆனந்தம் த்ருகின்றன..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி

      Delete
  3. //அவர்கள் தாபத்தில் தவிக்கும் மனித குலத்திற்கு தாகத்தை தணிக்கும் நீரூற்று போன்றவர்கள்.//

    ;)))))

    //இனி அப்படிப்பட்ட ஒரு ஞானியின் வாழ்க்கை சரிதத்தில் நடந்த லீலைகளை காண்போம்.//

    ஆவலுடன் காத்திருக்கிறேன் தொடருஙள் அண்ணா.பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete