Wednesday, June 12, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(71)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(71)







இராமா !
நிர்மல இதயத்துடைய பக்தர்கள் உன்னை 
பிரிந்து எவ்வாறு உயிர் தரிப்பார்களோ?

கீர்த்தனை(276)-நின்னு பாஸி  எட்ல யுந்துரோ    
ராகம்-பலஹம்ச -தாளம்-ஆதி 

நிர்மல இதயத்துடைய பக்தர்கள் உன்னை
பிரிந்து எவ்வாறு உயிர் தரிப்பார்களோ?
(இருக்கமாட்டார்கள் என்று பொருள்)

களங்கமற்றவனே!
புண்ணிய ஸ்வரூபனே!
வானவரின் தலைவனே!
சனகர் முதலியோரால்
சரணடையப்பட்டவனே!
கருணை நிரம்பியவனே!
கண்களுக்கு குளிர்ச்சியையும்
செவிகளுக்கு அமுதத்தையும்
உடலுக்கு ஆனந்தத்தையும்
அளிப்பவனே!

தியாகராஜனின் சித்தமிசை வாழ்பவனே!
நிறைவேறிய விருப்பங்களை உடையவனே!

மிக அற்புதமான கீர்த்தனை.

உண்மை பக்தன் தன் 
இஷ்ட தெய்வத்தை பிரிந்து 
உயிர் வாழமாட்டான். 

நீரில் வாழும் மீனை தரையில் விட்டால்
 மீண்டும் நீரை சென்றடைய எப்படி துடிக்குமோ 
அப்படிதான் இறைஇன்பத்தை அனுபவித்த 
பக்தனின் மனநிலையும் இருக்கும். 

ஒருவன் இறைவனை அடைய 
அது போன்ற மனநிலையை அடையவேண்டும் 
அப்போதுதான் அவனுக்கு இறைஅருள் சித்திக்கும் 
என்று பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறியுள்ளார்.

நிலைத்த,நீடித்த என்றும் மாறாத இன்பத்தை 
அடையவேண்டுமென்றால் அதற்கேற்ற 
முயற்சியும் செய்துதான் ஆகவேண்டும் 

5 comments:

  1. //நீரில் வாழும் மீனை தரையில் விட்டால் மீண்டும் நீரை சென்றடைய எப்படி துடிக்குமோ அப்படிதான் இறை இன்பத்தை அனுபவித்த பக்தனின் மனநிலையும் இருக்கும்.//

    அருமையான உதாரணத்துடன் அழகான பகிர்வு. நன்றிகள்.

    ReplyDelete
  2. /// உண்மை பக்தன் தன் இஷ்ட தெய்வத்தை பிரிந்து
    உயிர் வாழமாட்டான்... ///

    விளக்கத்திற்கு நன்றி ஐயா.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நிலைத்த,நீடித்த என்றும் மாறாத இன்பத்தை
    அடையவேண்டுமென்றால் அதற்கேற்ற
    முயற்சியும் செய்துதான் ஆகவேண்டும்

    அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி

      Delete