Sunday, June 23, 2013

மாதா அம்ருதானந்தமயி அருளுரைகள்.

மாதா அம்ருதானந்தமயி 
அருளுரைகள். 




























ஒரு மனிதன் உலகியல் வாழ்வில்
பல துறைகளில் சிறந்து விளங்கக் கூடும்.
ஆனால் ஆன்மீக கல்வியில்
அவன் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறான்

அக்கல்வியைப் பெற வேண்டுமெனில்
அவன் குருவிற்கு தலை
வணங்கியே ஆகவேண்டும்

ஒரே திறவுகோலால்
எல்லா பெட்டிகளையும் திறக்க முடியாது

தலை வணங்காத இயலாத காலம் வரை
ஆன்மீக கல்வியில் ஒரு அடி கூட முன்னேற முடியாது.

இறைவனை அடையவேண்டும்
என்ற விருப்பத்துடனும்களங்கமற்ற மனதுடனும்
நாம் குருவிடம் சென்றால் அவர் கூறுபவைகளை
சரியாக புரிந்துகொள்வதில் தடை ஏதும் இருக்காது

ஆன்மீகக் கல்வியென்னும் பெட்டியைத்
திறப்பதற்குரிய திறவுகோலாகத் திகழ்வது
களங்கமற்ற தன்மையும், குருவிடம் சீடனுக்குள்ள
அர்ப்பண  மனோபாவமுமே ஆகும்

இறைவனை அடைவதற்குரிய உண்மையான
விருப்பமும் பிறரிடம் பணிவாக் நடந்து கொள்வதும்தான்
ஒரு சீடனுக்கு தேவையான் அடிப்படை குணங்கள் .

இவைகளை நாம் வளர்த்துக்கொண்டாலனைத்தையும்
ஏற்றுக்கொள்ளும் திறமையைப் பெறுவோம்.

அத்துடன் நாம் முழுமை அடைகிறோம்.

 நம்மை அறியாமல் நம் உள்ளே
ஆத்மஞானம் நிறையும்.

matruvani-2005

4 comments:

  1. நல்ல உயிரோட்டமுள்ள படமாக வரைந்துள்ளீர்கள். ஸ்பெஷல் பாராட்டுக்கள். ;)))))

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பியுடையான் படைக்கஞ்சான்
      நோஞ்சானாக இருந்தாலும் கூட

      ஊக்குவிக்க திருச்சி பாசக்கார தம்பி
      VGKஇருக்கையில்
      எனக்கு என்ன கவலை?
      வரைந்து தள்ளிக்கொண்டே இருப்பேன்.

      Delete
  2. அடிப்படை குணங்கள் அருமை...

    கைவண்ணம் சூப்பர்...!

    நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete