Thursday, June 27, 2013

நீல வண்ண கண்ணா வாடா

நீல வண்ண கண்ணா வாடா 




























நான் மேலே  வரைந்த 
கண்ணன்படத்திற்கு
பொருத்தமான பாடல் 


1955 ஆம் ஆண்டு வெளிவந்த மங்கையர் திலகம்
என்ற படத்தில் வந்த இனிமையான் பாடல்.
ஆர். பாலசரஸ்வதி அவர்கள் பாடியது.
பாடலை இயற்றியவர். மருதகாசி.
இசைஅமைத்தவர். தஷிணாமூர்த்தி (பாடல்கேட்க)
http://www.youtube.com/watch?v=c-tPHG3LEB4


நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்த வடிவில்  வந்தான்
எல்லையில்லா கருணைதன்னை
என்னவென்று சொல்வேனப்பா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலையெல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் .  வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
பொன்னானால நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்க  செய்யும்  வாடை  காற்றே
நியாயமில்லை உந்தன்  செய்கை
தடை  செய்வேன்  தாளை  போட்டு
முடிந்தால்  உன்  திறமை  காட்டு

விண்ணில்  நான்  இருக்கும்  போது
மண்ணில்  ஒரு  சந்திரன்  ஏது
அம்மா  என்ன  புதுமை  என்றே
கேட்கும்  மதியை  பாரு

இன்ப  வாழ்வின்  பிம்பம்  நீயே
இணையில்லா  செல்வம்  நீயே
பொங்கும்  அன்பின்  ஜோதி  நீயே
புகழ்  மேவி  வாழ்வாய்  நீயே


4 comments:

  1. Ennam arumai...vannam aumai..padalum arumai..Nandri..Namaskaram.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி
      திரு .வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி அவர்களே
      உங்களுக்காக இவன் வரைந்த
      குழலூதி மனமெல்லாம்
      கொள்ளை கொண்ட கோபாலனின்
      படம் அனுப்பியுள்ளேன்
      .
      இந்த பாடலை தேர்ந்தெடுத்தமைக்கான
      மற்றொரு காரணம் ,பாடலில் உள்ள ஒரு வரிதான்
      "நீல வண்ணக் கண்ணா வாடா
      ,நீ ஒரு முத்தம் தாடா ,
      நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா"

      .மேலும் பாலசரஸ்வதி அவர்களின்
      இனிய,வித்தியாசமான
      தேவேகான குரல் ஆகியவைதான்.

      இவ்வுலகில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும்
      அவன் வடிவே என ஆராதனை செய்ய தோன்றும்
      அருமையான பாடல். வரிகள்
      .

      Delete
  2. கண்ணன் படமும் பாடலும் அருமை. பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete