Saturday, June 22, 2013

கேதார்நாத் சம்பவம் -ஒரு பாடம்

கேதார்நாத்  சம்பவம் -ஒரு பாடம் 












அன்பே சிவம் 

ஆனால் அவன் படைப்புக்கள் 
அவனின் மற்ற படைப்புகளிடம் அன்பு 
பாராட்டாவிடில் அவனே அம்பாக மாறி 
அவர்களை அழித்திடவும் செய்வான்

அதுதான் சமீபத்தில்
கேதார்நாத்தில் நடந்த நிகழ்வு

கேதார்நாத் என்பதின் பொருள் என்ன? 

கே (கேளுங்கள் ) ஆதார்நாத (ஆதார நாதமாகிய ஓம் என்னும் ஒலியை) என்று பொருள் .

அந்த இடம் வழிபாடு செய்ய மட்டுமே 

வயிற்றுப்பாட்டை கவனிக்கும் இடம் அல்ல 

அது சிவனின் இடம்.
அங்கு யாருக்கும் எதுவும் சொந்தம் இல்லை .
இன்று அவன் மட்டும் நிற்கின்றான்

அவனை சுற்றி சொந்தம் கொண்டாடியவர்கள் 
அனைத்தையும் இழந்து நிற்பதே இதற்கு சான்று.


வருவோர் போவோரிடம் வாங்கி வாங்கி 
சேர்த்த காசெல்லாம் காணாமல் 
போய் விட்டதல்லவா இன்று  

இனியாவது சிவ சொத்து குல நாசம்
என்பதை இந்த மூட ஜன்மங்கள் 
புரிந்து கொண்டால் நல்லது.

ஆனால் இந்த நிகழ்விற்கு
அரசின் மீது குறை கூறுகின்றன
 குறை பிரசவங்கள்.

கலப்பட சந்தனத்தை அபிஷேகம் என்ற பெயரில் 
அவனுக்கு அளித்ததை வெறுத்துத்தான் 
பூமகளின் புனிதமான சேற்று குழம்பை தன் 
உடலில் ஆசை தீர பூசிக்கொண்டான் போலும்.

நதிகளில் கழிவுகளை விட்டு அசிங்கபடுத்திய
ஜீவன்கள் அளித்த அபிஷேக நீரினால்
ஏற்பட்ட களங்கத்தை போக்கவே
மேகத்தை உடைத்து முழு நீரையும்
தன் சிரசில் ஊற்றி கொண்டான் போலும்.

தெள்ள தெளிந்த ஜீவனுக்கு
அவன் சிவ லிங்கம் 

தெளியாதவர்கள் தெளியும்வரை  
கேதார்நாத் போன்ற இடங்களில்தான் 
அவனை தேடவேண்டும். 

இந்த உலகம் பரந்தது.
அதில் குடியேற ஏராளமான இடம் உள்ளது.
இனியாவது இறைவன்
சொத்தில் கை வைக்காதீர்.
சொந்த பந்தங்களே இல்லாமல் செய்திடுவான்.

அவனோ அகோர மூர்த்தி 

இருப்பினும் அக்கிரமங்களை காண சகியாதுதான் 
அவன் ஆடினான்  கோர தாண்டவ மூர்த்தியாக 

அவன் ஆடிய தாண்டவத்தில் பலியானோர்
அவன் திருவடி அடைந்திருப்பார்
அவனை அந்த நேரத்தில் நினைத்திருந்தால்.

தப்பி பிழைத்தவர்கள் இனி இவ்வுலகில் 
உள்ள காலம் வரை அவன் திருநாமத்தை 
நெஞ்சில் நிறுத்தி பிறரை நிந்தனை செய்யாமல் 
அன்பு நெஞ்சம் கொண்டு வாழ்வதுதான் 
அவனுக்கு ஆற்றும் நன்றிக்கடன் 


6 comments:

  1. வருத்தப்படும் சம்பவம்...

    விளக்கங்களுக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. அயோக்கியர்களின் கையில்
      இந்த நாடு சிக்கி தவிக்கிறது

      அரசு போடும் நன்மை அளிக்கும் திட்டங்கள் எதுவும் போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேருவதில்லை.வழியிலேயே வழிப்பறி செய்யப்படுகிறது.

      எந்த பிரச்சினை எடுத்தாலும் இழுபறி.
      எதற்கும் முடிகாணா இயலாத கையாலாகாத அரசுகள்.

      நீங்களும் நானும்
      வருத்தப்பட்டு என்ன செய்வது?

      Delete
  2. அடடா, படிக்கவே மனதுக்கு கஷ்டமாகவும், வேதனையாகவும் உள்ளதே. .

    “அன்பே சிவம்” அல்லவா!

    சிவ! சிவா!! எல்லோரையும் காப்பாற்று !!!

    ReplyDelete
    Replies
    1. காப்பாற்றுவது
      விஷ்ணுவின் வேலை.
      அவரிடம் முறையிடுங்கள்.

      Delete
  3. மாடத்துலான் அலன் மண்டபத்தான் அலன்
    . கூடத்துலான் அலன் கோயிலுள்ளே அலன்
    வேடத்துலான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
    . மூடத்துள்ளே நின்று முக்தி தந்தானே----திருமந்திரம்



    ReplyDelete
    Replies
    1. வானத்தில் கடவுளை தேடும் மதியிலீர்
      தேனுக்கும் இன்பம் சிவப்போ கருப்போ
      தேனுக்குள் இன்பம் செரிந்திருந்தாற்போல்
      ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

      Delete