Tuesday, June 11, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(66)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(66)

மனமே!
மனத்தூய்மையில்லாமல் 
பூசை செய்வது மிகவும்
 நீசமான பன்றியின் பிழைப்பாகும் 






கீர்த்தனை(319)-ஸ்வர ராக சுதா ரசயுத பக்தி-
ராகம்-சங்கராபரணம்-தாளம்-ஆதி 


மனமே ஸ்வரம்,இராகம்,ஆகியவற்றின்
அமுத ரசத்துடன் கூடிய பக்தியே சுவர்க்கம், மோட்சம்
இரண்டையும் அளிக்க வல்லது

பரமானந்தமென்னும் தாமரை மீது
கொக்கும் தவளையும் உட்கார்ந்து என்ன பயன்?

மூலாதாரத்தில் பிறக்கும் நாதத்தை
அறிவதே மகிழ்ச்சி தரும் மோட்சமாகும்

கோலாகலம் நிறைந்த சப்த ஸ்வரங்களின்
உற்பத்தி ஸ்தானங்களைத்  தெரிந்து கொள்வதே
ஒருவனுக்கு மோட்சமாகும்

மத்தளத்தின் தாள கதிகளையறியாமல்
அதை அடித்தால் சுகம் கிடைக்குமா?

அவ்விதமே மனத்தூய்மையில்லாமல்
பூசை செய்வது மிகவும் நீசமான
பன்றியின் பிழைப்பாகும்

அனேக ஜென்மங்களுக்குப்  பிறகு
ஒருவன் ஞானியாக விளங்குவது
மோட்சமடையும் வழியாகும்

ஆயினும் இயற்கையான பக்தியுடன்
இராக ஞானம் படைத்தவன்
அதிவிரைவில் முக்தனாகிறான்

கைலாசபதியாகிய சிவபெருமான்
பார்வதிக்குரைத்த
இந்த "ஸ்வரார்ணவ" இரகசியங்களை
அறிந்து வெற்றி பெற்ற தியாகராஜனை நம்பி
 இவற்றை நீ தெரிந்துகொள்.

மிக பொருள் பொதிந்த கீர்த்தனை.

மீண்டும் மனதிற்கு உபதேசம்
மனிதர்களுக்கு சொன்னால்
சினம் கொள்வார்கள்.

இன்று எல்லோரும் இசை பயில்கிறார்கள்.
ஏதோ சிறிது பயின்றதுமே
கர்வம் தலைக்கு. ஏறிவிடுகிறது

ஆனால் மோட்சத்தை அளிக்க வல்ல
இசையின் தெய்வீக இரகசியங்களை
இந்த கீர்த்தனையில் சுவாமிகள் விளக்குகிறார்கள்

புரந்தரதாசர், அன்னமையா ,
பத்ராசலம் ராமதாசர்,
சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள்
போன்ற எண்ணற்ற மகான்கள் பக்தி ரசம்
ததும்பும் கீர்த்தனைகளை இறைவன்
முன் பாடி இசையால்
இறைவனை அடைந்துள்ளனர்.

நமக்கு அந்த பாக்கியம்
கிடைக்கவில்லைஎன்றாலும்
அந்த கீர்தனைகளையாவது காதால் கேட்டு
நம் மனதை இறைவனின்
திருவடிகளில் செலுத்துவோமாக.

4 comments:

  1. //நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லைஎன்றாலும் அந்த கீர்தனைகளையாவது காதால் கேட்டு நம் மனதை இறைவனின் திருவடிகளில் செலுத்துவோமாக.//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //புரந்தரதாசர், அன்னமையா , பத்ராசலம் ராமதாசர்,
    சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள் போன்ற எண்ணற்ற மகான்கள் பக்தி ரசம் ததும்பும் கீர்த்தனைகளை இறைவன்
    முன் பாடி இசையால் இறைவனை அடைந்துள்ளனர்.//

    ;))))) அருமையான அழகான தகவல்கள். நினைவூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது..

    ReplyDelete
  3. உங்களால் நாங்கள் அறிந்து கொள்கிறோம்... நன்றி ஐயா...

    ReplyDelete