Sunday, June 16, 2013

மாதாஅமிர்தானந்தமயீ

மாதா அமிர்தானந்தமயீ






மாதாவை போற்றி 
துதிக்கும் இனிமையான பஜன்.

குருவடிவானவளே அம்மா (2)
குருவடிவானவளே  அமிர்தானந்தமயீ
திருவடி பணிந்தேன்
வரம் ஒன்று தருவாய்

அமிர்தபுரீஸ்வரி ஆனந்த வடிவே
அருளோடு என்னையும்
உன் பதமலர் சேர்ப்பாய்  (குரு)

எழில் வடிவானவளே
சிவசக்தி பார்வதி
சரணம் அடைந்தேன்
எழுந்தருள்வாயே

தினம் தினம் உன்னை நாடிவரும்
பக்தர்கள் கூட்டம்
மனம் தனில்  தோன்றுமே
தேவியின் ரூபம்  (குரு)

அருள் வடிவானவளே
ஆதிபராசக்தி (2)
அன்புடன் துதிப்பேன்
ஆதரிப்பாயே

வேதத்தின் சாரத்தை
தரும் நின் உபதேசம்
பாபத்தை போக்கிடும்
தாயே உன் தரிசனம்  (குரு)

திங்களை சூடுகின்ற
சிவனின் திருநாமம்
எங்களை காக்கின்றதே
அனுதினமும் போற்றினால்

கவிதையில் எழுதிடவே
எனக்கும் இயலவில்லை
புரியாத உன் பெருமை
எழுத்தில் அடங்கவில்லை (குரு)

5 comments:

  1. நல்ல பாடல்... படம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தை பார்த்தவுடன் ஏன்
      நான் வரையக்கூடாது என்று நினைத்தேன்
      மூன்று நாட்கள் முயற்சி செய்து இந்த படம்
      வரைவதில் மூழ்கிவிட்டேன் நன்றி DD .

      Delete
  2. வரைந்துள்ள படம் உள்பட அனைத்துமேஅருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete