Wednesday, June 5, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(56)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(56) 




மனத்தை ஓரிடத்திலும் நிறுத்த 
முடியாதவன் மாயாஜாலம் செய்து 
முக்தி அடைந்து விட முடியுமா?

(கீர்த்தனை(356)-நீகே தயராக நே ஜேயு -ராகம்-நீலாம்பரி(மேள-29)

இத் தியாகராஜன் மீது உனக்கே
தயவு பிறக்கவில்லையாகில் நான்
செய்யும் காரியங்களனைத்தும்
நிறைவேறுமா?
இராமா!

உன்னுடன் இரண்டறக் கலந்து
அயிக்கியமாகாமல்
"நான் வேறு ,நீ வேறு" என்ற
வேறுபாடுள்ள ஞானிக்கு
எவ்வாறு சுகம் கிடைக்கும்?

ஒ ராகவா?

மனதை ஓரிடத்திலும்
நிறுத்தமுடியாதவன் மாயாஜாலம்
செய்து முக்தி அடைந்து விட முடியுமா?

கண் ஜாடையை புரிந்து கொள்ளாத
பெண்ணை பலாத்காரமாக
கைபிடித்தால் அவள்
வசமாகிவிடுவாளா!

பழக்கத்தில் இல்லாத கல்வியைக்
கொண்டு சபையில் வாதம்
புரிவது சாத்தியமா?

இரகசியமாக கேள்வியுற்ற
விஷயத்தை மனத்தில் வைத்துக்கொள்ள
முடியாத அரசிகனைப் போல் ஆகி விடுமே!

பெரியதனத்திற்காக அனேக
தர்மங்கள் செய்தால் பகவான்
காப்பாற்றுவாரா?

தாரக நாமத்தாய் !
இவையனைத்தையும்
தவறான மொழிகளல்ல
ஒ ராகவா!

இந்த கீர்த்தனையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது 
என்னவென்றால் மாயா ஜாலத்தாலும், 
விளம்பரத்திற்காக  தான தர்மங்கள் செய்வதாலும், 
மனதை ராமபிரானின் வடிவத்திலாவது அல்லது 
அவன் நாமத்திலாவது நிலை நிறுத்தாமல் அவன் 
அவன் அருளை பெற்று அவனுடன் இரண்டற 
கலத்தல் இயலாத காரியம் என்பதை 
நமக்கு உணர்த்துகிறார். 

எனவே இவைகளை தவிர்த்து
அவன் மீது பக்தி செய்து அவன்
அருளை பெற முயற்சி
செய்தல் வேண்டும்.

Pic.courtesy-google-images.

7 comments:

  1. //அவன் மீது பக்தி செய்து அவன் அருளை பெற முயற்சி
    செய்தல் வேண்டும்.//

    அருமையான சிந்தனைப் பதிவு,. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. அருளை பெறுவதே பெரிய விசயம்...

    விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. முயன்றால் முடியாதது
      ஒன்றுமில்லை

      Delete
  3. //கண் ஜாடையை புரிந்து கொள்ளாதபெண்ணை பலாத்காரமாக கைபிடித்தால் அவள் வசமாகிவிடுவாளா!//

    அதானே! அதெப்படி வசமாகிவிடுவாள். வசைபாடி ஊரைக்கூட்டி உள்ளே தள்ளிவிடுவாளே !

    //இவையனைத்தையும் தவறான மொழிகளல்ல ஒ ராகவா!//

    ;))))) அருமையோ அருமை.

    ReplyDelete
    Replies
    1. அருமையோ அருமை
      ஸ்ரீ ராமனின் பெருமை

      அவன் நாமம் சொல்ல சொல்ல
      நீங்கிடும் நம் சிறுமை
      விட்டு ஓடிடும்
      மாந்தர் வறுமை

      Delete
  4. தாரக நாமத்தாய் !
    இவையனைத்தையும்
    தவறான மொழிகளல்ல
    ஒ ராகவா!

    தியாகராஜ சுவாமிகளின் சிறப்பான சிந்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ ஜகதீஸ்வரி துர்கா !
      ஸ்வாகதம் ஸ்வாகதம் சுஸ்வாகதம் !
      ராஜ ராஜேஸ்வரி ராஜீவ நேத்ரி....
      பாடலை பாடலை கேட்டதுண்டா?

      Delete