Saturday, June 1, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(53)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(53)





















சீதாராம!
நான் உண்மையாக 
உன்னையே நம்பியுள்ளேன்

(கீர்த்தனை-215-ராம நின்னே நம்மிநானு-
ராகம் ஹுசே னி -தாளம்-ஆதி)

சீதாராம!
நான் உண்மையாக
உன்னையே நம்பியுள்ளேன்
மன்மதன் தந்தையே !
சுந்தரமுகத்தவனே!
கருணைக்கடலே!
என்னைக் காப்பாற்று!

நீ அனைத்திற்கும் சாரமானவன்
சாமம் முதலிய வேதங்களின் பொருள்
நித்தியன்
அறிஞர்க்கு இன்பம் பயப்பவன்
ஒளிவீசும் முத்துமாலையும்  ,பொன்மயமான
தோள்வளையும் அணிந்தவன்

அரக்கரை வதைப்பவன்
தீயவருக்கு எட்டாதவன்
ரகு குலத்தை உத்தாரணம் செய்தவன்
உதாரன்
குபேரனால் வணங்கப் பெறுபவன்
தேவர் குழாத்துடன் கூடியவன்
திருவளிப்பவன்
தியாகராஜனின் இதயதாமரையை
மலர்விக்கும் சூரியன்
தயரதன் மைந்தன்.

இந்த கீர்த்தனையும் அருமையான 
பொருள் பொதிந்த கீர்த்தனை.

ஒரு ராம பக்தன் அவன்
இஷ்ட தெய்வமான
ஸ்ரீ ராமனை முழுமையாக,
உண்மையாக நம்பவேண்டும்.

நம்மை அவனை நினக்கவொட்டாமல்
தடுக்கும் ஐம்புல கள்வர்கள் என்னும்
அரக்கர்களை மாய்ப்பவன் ஸ்ரீ ராமன்.

குபேரன் செல்வத்திற்கு அதிபதி.
அவனிடமிருந்து அவன் புஷ்பகவிமானதையும்
அவன் செல்வங்களையும் அபகரித்தான்
அவன் சகோதரன் ராவணன்.

ஸ்ரீராமன் அவைகளை ராவணனிடமிருந்து
மீட்டுகொடுத்ததால் ஸ்ரீராமனை வணங்கி மகிழும்
குபேரன். ராம பக்தர்களுக்கு கேட்காமலேயே
அனைத்து செல்வங்களையும் அள்ளி தருவான்.

இதைதான் கம்ப நாட்டாழ்வார்
"நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
"ராம நாமம் என்றார்.

புன்னகை தவழும் அழகிய அவன்
தெய்வீக திருமுகத்தை  நினைத்துக்கொண்டு
அவன் நாமத்தை பக்தியுடன்
உச்சரிக்கும்போது நம் மனதில் உள்ள தாபங்கள்
அனைத்தும் நீங்கி உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்.
சூரியனை கண்ட தாமரை மலர் மலர்வதைபோல்.

4 comments:

  1. /// ஸ்ரீ ராமனை முழுமையாக... உண்மையாக நம்பவேண்டும்... ///

    விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. //நம்மை அவனை நினக்கவொட்டாமல் தடுக்கும் ஐம்புல கள்வர்கள் என்னும்
    அரக்கர்களை மாய்ப்பவன் ஸ்ரீ ராமன். //

    அருமையான பகிர்வு. வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் தரிஸனம் கிடைக்கப்பெற்றேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete