Sunday, June 16, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(82)

தியாக ராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(82)





இராமா!
நீ ஆட்டிவைத்தபடி ஆடும் 
என் மீது உனக்கு கோபம் வரக்  காரணமேன்?

கீர்த்தனை(359)-பலுகவேமி நா தைவமா 
ராகம்-பூர்ணச்சந்திரிகா-தாளம்-ஆதி

இத் தியாகராஜனுடன் நீ பேசமாட்டாயோ?
என் தெய்வமே!

பிறர் நகைப்பது நியாமா?
இராமா!

நீ ஆட்டி வைத்தபடி  ஆடும்
என் மீதும் உனக்கு என் மீது கோபம் வரக் காரணமேன்?

தாய் தந்தையர் எனக்கு தெய்வ பக்தியை
புகட்டி என்னைக் காத்தனர்

மற்றோர் என்னைப் பலவிதத்திலும்
துன்பத்திற்க்காளாக்கினர்

இவை அனைத்தையும்  அறிந்தும்
நீ எத்தனைக் காலம் சும்மா இருக்கப் போகிறாய்?

தேவாதி தேவனே!

மிக அருமையான கீர்த்தனை

இந்த உலகையும், உயிர்களையும் படைத்த
இறைவன் அவைகளுக்குள் இருந்துகொண்டு
அவர்களை ஆட்டி வைக்கின்றான்.

ஆனால் ஜீவன்கள் அறியாமையினால்
தான் என்ற அகந்தையினால்  தன்னால்தான்
அனைத்தும் நடைபெறுகின்றன
என்று எண்ணுகின்றன.

அகந்தை உச்ச கட்டத்தை தொடும்போது
அவர்களை விட்டு இறைவன்
வெளியேறி விடுகின்றான்.

ஆனால் அப்போதும், அந்த ஜீவன்கள்
 உண்மையை உணர்வதில்லை.

ஸ்வாமிகள் போன்ற மகான்கள்
இந்த உண்மையை உணர்ந்து அதை
நமக்கு வெளிப்படுத்தியுள்ளதை கவனிக்கத்தக்கது.

அவரின் பெற்றோர்கள்
பக்தியை ஊட்டினார்கள் .

ஆனால் இன்றைய பெற்றோர்கள்,
கர்பத்திலிருந்தே போட்டியையும் பொறாமையையும்,
பொய் பேசுதலையும் ஆபாசங்களையும்
தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்து
முடிவில் அவர்களால் துன்பத்தில் வாடுகிறார்கள்.

இன்றைய உலகில் மனிதர்கள்
எதிலும் ஆதாயம் தேடுகிறார்கள்.

பக்தன் எதிலும் நாட்டமில்லாமல்
இறை சிந்தனையில் மூழ்கியிருப்பதால்
அவனை சுற்றியுள்ளவர்கள் அவனுக்கு
தொல்லைகளை தருவதே
தொன்று தொட்டு வழக்கமாக உள்ளது.

இறைவன் அனைத்தையும் அறிவான்.

அதை நாமும் அறிந்துகொண்டு
அவன் திருவடிகளையே நாட வேண்டும்.

7 comments:

  1. //அவரின் பெற்றோர்கள் பக்தியை ஊட்டினார்கள் .

    ஆனால் இன்றைய பெற்றோர்கள், கர்பத்திலிருந்தே போட்டியையும் பொறாமையையும், பொய் பேசுதலையும் ஆபாசங்களையும் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்து முடிவில் அவர்களால் துன்பத்தில் வாடுகிறார்கள்.

    இன்றைய உலகில் மனிதர்கள் எதிலும் ஆதாயம் தேடுகிறார்கள்.//

    மிகச்சரியான கூற்று.

    தியாகப்பிரும்மத்தின் தந்தை ராமப்பிரும்மம், தான் இறக்கும் சமயம், தன் சொத்தாகிய, தான் செய்து வந்த கோதண்டராமர் விக்ரஹங்களை அவருக்கு அளித்துவிட்டு, சொன்னாராம். ”பத்து கோடி தடவை ஸ்ரீ இராமநாமம் ஜெபித்துவா .... பிர்த்யக்ஷமாக ஸ்ரீ இராமன் காட்சியளிப்பான்” என்று.

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. //தியாகப்பிரும்மத்தின் தந்தை ராமப்பிரும்மம், தான் இறக்கும் சமயம், தன் சொத்தாகிய, தான் செய்து வந்த கோதண்டராமர் விக்ரஹங்களை அவருக்கு அளித்துவிட்டு, சொன்னாராம். ”பத்து கோடி தடவை ஸ்ரீ இராமநாமம் ஜெபித்துவா .... பிர்த்யக்ஷமாக ஸ்ரீ இராமன் காட்சியளிப்பான்” என்று.//

    தான் ’தினமும் பூஜை’ செய்து வந்த கோதண்டராமர் விக்ரஹங்களை .......

    என்று இருக்க வேண்டும்.

    “தினமும் பூஜை” என்ற இரு வார்த்தைகள் டைப் அடிக்கும் போது விடுபட்டுவிட்டன, ஸ்வாமீ.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் மகனோ 96 கோடி முறை
      ராம நாமம் ஜபித்து ராமனையே கண்டார்.
      கண்டதைஎல்லாம் நமக்காக
      கீர்த்தனைகளாய் பாடி ,எழுதி வைத்து விட்டார்.
      என்னே அவர் மாண்பு!

      மகனென்றால்
      இப்படியல்லவோ
      இருக்கவேண்டும்

      நானும் இருக்கிறேனே
      இந்த பூமிக்கு பாரமாய்
      எந்த சாதனையும் செய்யாமல்
      வெட்டிகதை பேசிக்கொண்டு.

      Delete
  3. அருமையான கீர்த்தனை... விளக்கங்களுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete