Monday, June 3, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (55)

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (55)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (55) 

நற்பதத்தை அளிக்கும் ராஜ மார்க்கம் 
இராமபிரானின் பஜனையே ஆகும் 







கீர்த்தனை-கஷீணமை  திருக  ஜன்மிஞ்சே (199)-ராகம்-முகாரி -தாளம் - ஆதி)

மனமே!

தேவ பாஷையாகிய சம்ஸ்க்ருதத்தில் நாடகம்
அலங்காரம்,முதலியன இயற்றுவதாலும்
அத்யயனம் செய்வதாலும்
புராணங்கள் படிப்பதாலும்
யாகம்,ஜபம், தவம்,
முதலியன செய்வதாலும்
உண்டாகும் பலன்கள்  நசித்து
திரும்பவும் ஜன்மம் எடுக்கும்
சித்தியை வேண்டாமென்று விட்டுவிடு.

நாம் எது செய்தாலும் உலகநாயகனாகிய
பகவான் அதைத் தன் சிரத்தாலும் உள்ளத்தாலும்
திடமான நற்பதத்தை அளிக்கும்
ராஜமார்க்கம் தியாகராஜன் வணங்கும்
ராமபிரானின் பஜனையே ஆகும்.

இந்த உலகில் எதை செய்தாலும் செய்யும்
எந்த செயலுக்கும் உரிய பலன்கள் வந்தே தீரும்

பலன்கள் வந்தால் அதை அனுபவிக்க பிறவிகள் உண்டு.
பிறவி என்று வந்தால் அதனுடன் அனைத்து
இன்ப துன்பங்களும் உண்டு.
இதற்கு முடிவே இல்லை.

அதனால்தான் கண்ணன் கீதையில்
எல்லாவற்றையும் அவனுக்கே
அர்பணிக்க சொன்னான்
,கடமையை செய்
பலனை எதிர்பாராதே என்றான்.

ஆதி சங்கரரும். கோவிந்தனை
பஜனை செய்வாயாக என்றார்.

இலக்கண நூல்களை  உருபோட்டு கொண்டு
வாழ்நாளை வீணாக்காதே என்றார்.

பல்லாயிரம் ஆண்டுகள் அசுரர்கள்
தவம் செய்து பல வரங்கள் பெற்று.
அகந்தை கொண்டு சொல்லொணா
பாவங்களை செய்து கோரமாக மாண்டனர்.

அநேகே ரிஷிகள் தவம் செய்து
பெற்ற  பயனை கொண்டு
பல துன்பங்களைத்தான் அடைந்தனர்.

முடிவில் பக்தி ஒன்றினாலேயே
அவர்கள் சாசுவதமான
சுகத்தை அடைந்தனர்.

எனவே ஸ்வாமிகள் சொல்லுகிறார்
திடமான நற்பதத்தினை அளிக்கும்
ராஜ மார்க்கம்
இராமபிரானின் பஜனையே என்று.

இராமநாமம் பஜனை செய்வோம்.
நித்தியமான சத்தியமான
பதத்தினை அடைந்து மகிழ்வோம்.


Pic courtesy .google-images.

4 comments:

  1. //அநேகே ரிஷிகள் தவம் செய்து பெற்ற பயனை கொண்டு பல துன்பங்களைத்தான் அடைந்தனர்.

    முடிவில் பக்தி ஒன்றினாலேயே அவர்கள் சாசுவதமான
    சுகத்தை அடைந்தனர்.

    எனவே ஸ்வாமிகள் சொல்லுகிறார் 'திடமான நற்பதத்தினை அளிக்கும் ராஜ மார்க்கம் இராமபிரானின் பஜனையே என்று.//

    மிகவும் நல்லசெய்தியைச் சொல்லும் அழகான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. எந்தவொரு நூலையும் உருபோட்டு கொண்டு வாழ்நாளை வீணாக்கக் கூடாது...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete