Friday, June 14, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(75)

தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(75)


இராம நாமமே கற்கண்டு
ரசமறியாதவன் கற்குண்டு

கீர்த்தனை(150)-இந்த சௌக்கியமநி  நே ஜெப்பஜால
ராகம்-காபி-தாளம்-ஆதி

இத்தனை இன்பம் இது என்பதை
வருணிக்க என்னால் இயலுமோ?

அது எத்தனையோ,
என்னவோ,
யாருக்குத் தெரியுமோ?

புலன்களையடக்கியவனே!
சீதையின் உள்ளம் கவர்ந்தவனே!
கருணை நிறைந்த உள்ளத்தாய்!
உன்னிடம் அன்பு பூண்டவர்களாலேயே
அவ்வின்பம் நுகரக் கூடியது.

ஸ்வரம்,ராகம்,தாளம்,என்னும்
அமுத ரசத்தில் உயர்ந்த இராமநாமம்
என்ற கற்க்கண்டைக்
கலந்து புசிக்கும்
சிவபெருமானுக்குத்தான்
தெரியும் அவ்வின்பம்.

இராம நாமத்தின் சுவையை சுவைத்தவர்கள்
மட்டுமே அறியமுடியும் என்கிறார் ஸ்வாமிகள்.

எவ்வளவுதான் வார்த்தைகளால் விவரித்தாலும்
அவைகளால் அந்த சுவையை வர்ணிக்க முடியாது 
என்கிறார்.மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாது.

இதைதான் திருமூலர். ஒரு தாய் தன் மணாளனோடு 
அடைந்த இன்பத்தை எப்படி பருவமடையா
 மகளுக்கு விளக்க முடியாதோ அதைபோல்தான்
இறை இன்பமும் என்று ஒரு சூத்திரத்தில் விளக்கியுள்ளார்.

அவரவர் முயற்சி செய்து 
அந்த உயர்ந்த நிலையை 
அனுபவிக்கவேண்டும்.

pic-courtesy-google images. 

10 comments:

 1. ஆஹா, ஒரே நாளில் அடுத்தடுத்து எவ்வளவு சிந்தனைகள்!!!!!!!.

  இருப்பினும் அனைத்துமே கற்கண்டு தான்.

  ”இராம நாமமே கற்கண்டு” அது தாங்கள் தான் !

  ”ரசமறியாதவன் கற்குண்டு”

  அதே அதே ..... அது சாக்ஷாத் நானே தான் ! ;)

  ReplyDelete
  Replies
  1. என்னே உங்கள் பணிவு !
   தன்னடக்கம், பாராட்டுக்கள்

   Delete
 2. //அவரவர் முயற்சி செய்து அந்த உயர்ந்த நிலையை
  அனுபவிக்கவேண்டும்.//

  அச்சா ! பஹூத் அச்சா!!

  அதுதான் கரெக்ட்.

  ReplyDelete
  Replies
  1. ये बात सचा बी है

   Delete
 3. திருமூலர் சொன்னது தித்திப்பாக உள்ளது. ;)))))

  நல்ல பகிர்வு. அதிக சுவாரஸ்யம். பகிர்வுக்கு நன்றி. .

  ReplyDelete
  Replies
  1. திருமூலர் இதுமட்டுமல்ல
   ஏராளமான விஷயங்களை
   சொல்லியிருக்கிறார்.

   படிப்பதற்கும் கடைபிடிப்பதர்க்கும்தான்
   ஆட்கள் இல்லை

   எதோ சிலர் கோயிலில்
   திருமந்திரத்தை வைத்து
   பூஜை செய்துகொண்டிருக்கிறார்கள்

   Delete
 4. ஒவ்வொரு நாளும் அண்டா அண்டாவாக ராமரசத்தை இப்படி அள்ளி அள்ளித் தருகிறீர்கள். ஆனாலும் ருசியோ ருசி தான். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அண்டா அண்டாவாக
   இவன் ராமரசம் பருகி
   பிறவா வரம்
   பெற அழைக்கின்றான்

   ஆனால் வருபவரோ இரண்டு
   அல்லது மூன்று பேர்.தான்

   அவர்கள் கூட இலையில் உள்ள
   அனேக சாப்பாடு வகைகளில்
   ஒன்றாக பாயசத்தை
   சிறிது பருகுவதுபோல் பருகிவிட்டு,
   அதில் உள்ள முந்திரி,திராட்சை
   முதலியவற்றை மட்டும் ருசித்துவிட்டு,
   தயிர் சாதம், ஊறுகாய்,
   ஐஸ் கிரீம் ,பீடா போட
   போய்கொண்டிருக்கிறார்கள்.

   மது ரசத்தில்
   மயங்கி கிடக்கிறது
   சில கூட்டம்

   காமரசம் எந்நேரமும்
   பருகிக்கொண்டு மாய்ந்து
   போய்க் கொண்டிருக்கிறது
   பெரும்பாலான கூட்டம்.

   இதுபோன்ற இராம பக்திபண்ணுவதால்
   எந்த பயனும் இல்லை என்று
   அவர்களுக்கு அந்த இராமபிரான்தான்
   புரியவைக்கவேண்டும்.

   இவன் ஒன்றும்
   செய்வதற்கில்லை.

   Delete
 5. அவரவர் முயற்சி செய்து...

  முக்கியமான வரி...

  நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete