Thursday, June 13, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(72)

தியாக ராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(72)






இராமா !
உன்  திருமுகத்தை 
பார்த்துக் கொண்டிருப்பதே 
என் வாழ்வு 

கீர்த்தனை(280)-நானு பாலிம்ப நடசி வச்சிதிவோ  
ராகம்-மோகன-தாளம்-ஆதி 

தாமரை கண்ணனே !
உன் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே
என் வாழ்வென்று நான் மனத்தில்
அன்புடன் எண்ணியிருக்கும்
மர்மத்தையறிந்து என்னைப்
பாலிக்க நடந்து வந்தனையோ  !

என் பிராணநாதனே!

இந்திர நீல மனியையோத்த
தேக பொலிவுடனும் திருமார்பில்
அசைந்தாடும் முத்துமாலைக்குவியலுடனும்
கரத்தில் ஏந்தியுள்ள கோதண்டம்,அம்புகள்
இவற்றின் ஒளியுடனும்,பூதேவியின்
புதல்வியாகிய சீதையுடனும்
(என்னை பாலிக்க வந்தனையோ?)

மிக இனிமையான கீர்த்தனை.

ஸ்ரீராமன் சீதாபிராட்டியுடன்  
தனக்கு தரிசனம் தந்ததை அப்படியே 
வர்ணிக்கும்போது நமக்கும் 
அந்த காட்சி கண்முன் தெரிகிறது. 

நாமும் அத்தகைய தரிசனத்தை 
பெற்று மகிழ அந்த தியாக பிரம்மம் 
ஆசி கூறட்டும். 


Pic.courtesy-google images. 

3 comments:

  1. //இராமா ! உன் திருமுகத்தை பார்த்துக் கொண்டிருப்பதே என் வாழ்வு//

    அழகோ அழகு தான். ஆனால் திருமுகத்தை எங்கே பார்க்க முடிகிறது? அடுத்தடுத்து உங்கள் பதிவுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. அதுவரை சந்தோஷமே.

    ராமபக்தி முற்றிப்போய் விட்டதால் அடிக்கடி பதிவு கொடுத்து அசத்தி வருகிறீர்கள். எவ்வளவு பதிவுகள் கொடுத்தாலும் ஏதாவது எழுதாமல் விடமாட்டோமில்லே ! ;)))))

    ReplyDelete
  2. ராம பக்தி முற்றிவிட்டால்
    முக்தி கிடைத்து விடுமே

    முற்றுவதர்க்கும் இந்த பிறவிக்கு
    முற்றுப்புள்ளி வைப்பதற்கும்
    இன்னும் காலம் உள்ளது.

    அதை அவனே அறிவான்.

    ReplyDelete