Friday, June 14, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(76)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(76)






ஸ்ரீராமா!
சபரிக்கு கிடைத்த பாக்கியம் 
எனக்கு கிடைக்குமா?

கீர்த்தனை (197)-எந்தநி  நே வர்நிந்துனு சபரி பாக்ய 
ராகம்-முகாரி(மேள-22)-தாளம்-ரூபகம் 

புலன்களை வென்ற முனிவர்களின்
தர்ம பத்தினிகள் பலர் இவ்வுலகு
முழுவதும் நிறைந்திருக்கையில்
(வேடுவ பெண்மணியாகிய)
சபரிக்கு கிடைத்த
பாக்கியத்தை நான் என்வென்று
வருணிப்பேன்?

சூரியகுல திலகனான
இராமனைக் கண்ணார
தரிசித்து அவனுக்கு இனிய கனிகளை
அளித்து ,மெய்சிலிர்க்க அதை கண்டு மனம்
நெகிழ்ந்து அவன் திருவடிகளில்  வீழ்ந்து
மறு பிறப்பில்லாத மோட்ச பதவியை
அடைந்தவளும் தியாகராஜனால்
வணங்கப்படுபவளுமான (சபரியின்
புண்ணியத்தை எவ்வளவென்று வர்ணிப்பேன்?)

இந்த கீர்த்தனை சபரியின் பக்தியை 
போற்றும் வகையில் 
அமைத்துள்ளார் ஸ்வாமிகள். 

இராமபிரானை உண்மையாக 
வணங்குபவன் அனைவருக்கும் 
தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் அவன் 
இடம் தருவான்.
அது எப்போது என்று 
அவனுக்குதான் தெரியும் !

பல்லாயிரம் ஆண்டுகள், 
தவ வாழ்வு மேற்கொண்டவர்களுக்கும், 
அவனையே நினைத்து தவம் புரிந்தவர்களுக்கும்,
அவனோடு வாழ்ந்தவர்களுக்கும்,
வேதம், முதலிய சாத்திரங்களை 
கரைத்து குடித்தவருக்கும் 
அவனுக்கே சேவை புரிந்தவர்களுக்கும்,
கிடைக்காத பாக்கியம்
இராமாபிரனை தவிர 
வேறொன்றும் நினைவில் கொள்ளாது 
வாத்சல்ய பக்தி ஒன்றையே 
தன் கருத்தாக கொண்ட படிப்பறிவற்ற 
ஒரு சாதாரண பெண்ணுக்கு கிடைத்தது. 

அதுமட்டுமல்லாமல் 
அந்த பரப்ரம்மம் அவளை தேடி 
அவள் இடத்திற்கே சென்று 
அவள் கொடுத்த கனிகளை உண்டு, 
அன்பினால் கனிந்த அவளின் பக்தியை 
மெச்சி தானே நேரில் சென்று 
ஏற்றுக்கொண்டதே அதுதான் 
அவளின் பக்தியின் பெருமை

அத்தகைய பக்தியை நமக்கும் 
அருள அந்த இராமபிரான்தான் 
கருணை செய்ய வேண்டும். 

4 comments:

  1. சபரியின் பக்தியை பற்றிய விளக்கம் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. சபரியிடம் கருணைகாட்டி அனுக்ரஹத்த ஸ்ரீ இராமர் கதையை சிந்தனையாகச் சொல்லியுள்ளது அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்றும் எளிமைக்கும் உண்மைக்கும்
      இரங்கி அருள் செய்வான் இறைவன்

      அகந்தைக்கும், ஆணவத்திற்கும்
      என்றும் கிடைக்காது அவனருள்

      அனைத்திலும் அவன் இருக்கிறான்
      என்று வாய் கிழிய மேடைபோட்டு
      பேசினால் போதாது

      அதை மனதளவிலாவது உணர்ந்து
      கொள்ள வேண்டும்

      செயலில் கொண்டுவர சேவை செய்ய
      வேண்டும் பலன் கருதாது. பல ஆண்டுகள்

      Delete