Tuesday, June 11, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(68)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(68)






இராமா என்னை நீ 
தத்தளிக்க விடுவது நியாயமா? 

கீர்த்தனை(306)-ராமச்சந்திர நீதய ராம ஏல ரா தய 
ராகம்-சுரடிதாளம்-தேசாதி  

இராமச்சந்திர!
உன் தயை எனக்கேன் கிடைக்கவில்லை?

கோடி மன்மதரை நிகர்த்த அழகனே!
மந்தரகிரியை தாங்கியவனே!
மிக்க ஆசையுடன் அழைத்தால்
யாரேனும் எதிரில் வராமலிருப்பார்களா?
இதன்  காரணம் நீ வனவாசத்தின்
பொழுது அனுபவித்த துன்பமோ?
அல்லது கைகேயியின் மீது கோபமோ?
நான் செய்த பாவமோ?
அல்லது உனது சக்தியின்மையோ?
சீதை உன்னை பெண்ணென்று
பரிகாசம் செய்ததால் ரோஷமோ?
அல்லது அன்று நீ மேற்கொண்ட உபவாசமோ?
அரண்மனையில்லாத வனவாசமோ?
நாங்கள் புரிந்த குற்றமோ?
என் சிநேகம் பொய் மயமானதோ?

அல்லது என்னைக் கண்டாலே
உனக்கு வெறுப்போ?
என்னை தத்தளிக்கவிடுவது உனக்கு நியாயமா?
தியாகராஜன் துதிபாடும் தெய்வமே!

இந்த கீர்த்தனையில் ஒரு உண்மை பக்தன்
இறைவனின் அருள் கிடைக்காமல் தவிக்கும்
நிலையை தெள்ள தெளிவாக படம் பிடித்து
காட்டுகின்றார் ஸ்வாமிகள்

பகவான் ராமகிருஷ்ணர் கூட தன் வாழ்நாளில்
இதுபோன்ற பக்தி பாவத்தினை
வெளிப்படுத்தியுள்ளது
நினைவில் கொள்ளத்தக்கது.

நமக்கும் அதுபோன்ற ஒரு நிலையை
அருள அந்த இராமபிரானையே பிரார்த்திப்போம்.

3 comments:

  1. உண்மையான தவிப்பு தான்..

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. //இந்த கீர்த்தனையில் ஒரு உண்மை பக்தன் இறைவனின் அருள் கிடைக்காமல் தவிக்கும் நிலையை தெள்ள தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றார் ஸ்வாமிகள்//

    அழகோ அழகு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete