Sunday, June 9, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(62)

தியாகராஜ  சுவாமிகளின் 
சிந்தனைகள்(62)





மனம் தன் வசப்பட்ட 
ஞானிக்கு மந்திர தந்திரங்கள் எதற்கு?


கீர்த்தனை(316)-மனஸூ ஸ்வாதீனமைன -
இராகம் -சங்கராபரணம்-தாளம்-ரூபகம் 


மனம் தன் வசப்பட்ட ஞானிக்கு
மந்திர தந்திரங்கள் எதற்கு?

தயரதன் மைந்தனே!

இவ்வுடல் ஆத்மாவல்ல (நானல்ல)  என்று
நினைப்பவனுக்கு தவம்
செய்ய வேண்டிய அவசியம் ஏது?

அனைத்தும்  நீயேஎன்று
எண்ணுபவனுக்கு (சந்நியாசம் முதலிய)
ஆசிரம வேறுபாடுகள் ஏது ?

உலகம் கண்கட்டு மாயை
என்று துணிந்தவனுக்கு
பெண்டிர், பொருள் முதலியவற்றின்
மீது மோகம் ஏது?

பிறந்தது முதல் கெட்ட விஷயங்களை நாடாமலிருப்பவனுக்கு
இறந்தகால ,எதிர்கால ,
சிந்தனைகள் எதற்கு ?

ராஜாதிராஜனே!
நிர்விகாரனே!
இணையற்றவனே!
மதிவதனனே!


மிக அருமையான கீர்த்தனை.
 ஸ்வாமிகள் குறிப்பிட்ட நிலையை 
அடைந்துவிட்டால் எல்லா 
துன்பங்களும் நீங்கிவிடும்.

நாம் எந்த சாதனையையும் 
மேற்கொள்ளாமலேயே 
ஞானம் சித்திக்கும். 

அது மிக கடினம்.
 இருந்தாலும் ஸ்வாமிகள் 
அந்த நிலையை அடைந்து நாமும் 
அந்த உன்னதமான நிலையை 
அடையும் வழியை நமக்கு காட்டியுள்ளதை
 நாம் மனதில் கொண்டு 
தீவிர முயற்சி மேற்கொள்ளவேண்டும். 

வெறுமனே புத்தகத்தை படித்துவிட்டு 
அடுத்த பக்கத்திற்கு போவதால் 
ஒன்றும் பயனில்லை. 

Pic-courtesy-google-images

4 comments:

  1. /// பிறந்தது முதல் கெட்ட விஷயங்களை நாடாமலிருப்பவனுக்கு இறந்தகால, எதிர்கால, சிந்தனைகள் எதற்கு ?///

    அருமை ஐயா... நன்றி...


    ReplyDelete
  2. //வெறுமனே புத்தகத்தை படித்துவிட்டு அடுத்த பக்கத்திற்கு போவதால் ஒன்றும் பயனில்லை. //

    சபாஷ்! ;)))))

    //உலகம் கண்கட்டு மாயை என்று துணிந்தவனுக்கு பெண்டிர், பொருள் முதலியவற்றின் மீது மோகம் ஏது?//

    அவ்வாறு துணியாத அப்பாவியான என்னைப் போன்றவர்களுக்கு, மோகத்தின் மீது மட்டும் தணியாத தாகமாக இருக்குமோ என்னவோ? ;)))))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக்கு
      பதிலாக ஒரு பதிவு

      Delete