Tuesday, June 11, 2013

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுதி-1)

சுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்-
குருவே இறைவன்(பகுதி-1)







குருவே இறைவன் (பகுதி-1)


ஆத்ம ஞானமானது
குருவினுடைய
கருணை மூலம்தான்
அடையப்பட முடியும்

ஞானம் குருவினிடமிருந்து
சீடனுக்கு அனுப்பப்படுகிறது

தெரியாத அந்த பிரம்மனை
நீங்கள்  உங்களுடைய
உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன்
மூலமும் பிரம்மத்தை அறிந்த
ஒரு குருவிற்கு சேவை செய்வதின்
மூலமும் அவரிடமிருந்து பாடங்களைக்
கேட்டுகொள்வதின் மூலமும் அறிய முடியும்

ஒரு மருத்துவ துறை மாணவனுக்கு
அத்துறையில் தேர்ச்சி பெற்ற
ஒரு பேராசிரியரின்
வழிகாட்டுதல் தேவைபடுகிறது.
ஒரு அனுபவம் வாய்ந்த
மருத்துவரின் உதவி தேவைபடுகிறது.

ஒரு இளநிலை வழக்குரைஞருக்கு
ஒரு பல வழக்குகளில்வதாடி வெற்றி
பெற்ற அனுபவம் வாய்ந்த
முதிய வழக்குரைஞரின்
உதவி தேவைப்படுகிறது

சமையல் தொழிலில் ஈடுபடுபவனுக்கு
ஒரு கைதேர்ந்த அனுபவம்மிக்க
பெரிய சமையல் வல்லுனரின்
உதவி தேவைப்படுகிறது.
ஏனென்றால் ஏட்டு சுரைக்காய்
சமையலுக்கு உதவாது.

இதுபோன்ற பல உலகாயதமான
விஷயங்களுக்கே மற்றவரின்
உதவி தேவைபடுகிறதென்றால்
புலன்களுக்கும் நம்முடைய
சிற்றறிவிற்கும் புலப்படாத
மறைபொருளாய் இருக்கும்,
ஆன்மாவை பற்றிய ஆன்ம ஞானத்தை
அறிவது அவ்வளவு எளிதான காரியமா?

எனவே ஆன்மனை உணர்ந்த
ஒரு உத்தம குருவினுடைய உதவி
ஒரு சாதகனுக்கு வழி காட்டுதலுக்கு
முக்கியமான தேவை

இல்லாவிடில் ஒரு சாதகன் அஞ்ஞானம்,
அந்தகாரம் என்னும் அறியாமையாகிய இருட்டு
ஆகியவை நிறைந்த அடர்ந்த காட்டில்
வழி தெரியாமல் தடுமாறி விழுந்து
பலவிதமான இன்னல்களில் சிக்கிகொண்டு
துன்புறுவதுடன் நேரமும் காலமும் வீணாகி
ஆன்மாவை அறியும் பாதையில்
எந்த முன்னேற்றமும் இல்லாமல்
செக்கு மாடுபோல் இருக்கும் இடத்திலேயே
உழன்றுகொண்டிருப்பான்

(இன்னும் வரும் )

4 comments:

  1. ஆன்ம ஞானத்தை அறிவது கண்டிப்பாக எளிதான காரியமும் அல்ல... அனைவருக்கும் கிடைப்பதும் அரிதானது...

    ReplyDelete
    Replies
    1. எளிதில் கிடைப்பதல்ல என்பதால்
      முயற்சியை கைவிட்டுவிடக்கூடாது .
      தொடர்ந்து முயற்சி
      செய்து கொண்டே இருக்கவேண்டும்

      Delete
  2. அருமையான பகிர்வு. தொடரட்டும் .... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. //எந்த முன்னேற்றமும் இல்லாமல் செக்கு மாடுபோல் இருக்கும் இடத்திலேயே உழன்றுகொண்டிருப்பான்//

    ;)))))

    ReplyDelete