Thursday, June 6, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (58)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள் (58)





யாருடைய தரிசனம் 
பிரம்மானந்தத்தை அளிக்கும்?  

கீர்த்தனம்-(209)-ராம பக்தி சாம்ராஜ்ய-
ராகம்-சுத்த பங்காள -தாளம்-ஆதி 

தன்னால் விளையாட்டாக  படைக்கபெற்ற
இம்மூவுலகமாகிய ஆரவாரத்தையுடைய
ஸ்ரீ இராமபிரானின் பக்திஎன்னும்
சாம்ராஜ்யம் (சக்கரவர்த்தி பதவி)
எம்மனிதர்களுக்கு கிடைக்கிறதோ
அவர்களுடைய தரிசனமே
பிரம்மானந்தம் அளிக்க வல்லது

அவ்வானந்தத்தை இப்படியென்று
வாணிக்க என்னால் இயலாது
அது ஒவ்வொருவரும் தாமே
அனுபவித்து அறியத்தக்கது.

இராம பக்தி செய்து
அவன் அருளை பெற்றவர்கள்
பெரும் ஆனந்தத்தை
வார்த்தைகளில் வடிக்க இயலாதது.

அதை ஒவ்வொருவரும்
தாமே அனுபவித்துதான்
தெரிந்து கொள்ள வேண்டும்
என்கிறார்கள் ஸ்வாமிகள்.

ராமதாசர் இந்த 
உலகமனைத்தும் 
ராம மயமாக 
தோன்றுவதாக கூறுகிறார். 

ஆனால் நம்மை போன்ற 
அஞ்ஞானிகளுக்கு 
மனிதர்கள்,மிருகங்கள்,
நல்லவன்,கெட்டவன் மலை,
மாடு, மரம் செடி .கொடி என்று 
கோடிக்கணக்கான 
பிரிவுகளாகத்தான் 
இந்த உலகம் 
தோற்றமளிக்கிறது. 

நமக்கும் அந்த உயர்ந்த 
உன்னத பாவனை அருள 
ஸ்ரீ ராமனை பிரார்த்திப்போம். 

Pic.courtesy-google images.

3 comments:

  1. தோற்றமளிப்பது உண்மை தான்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. //ராமதாசர் இந்த உலகமனைத்தும் ராம மயமாக தோன்றுவதாக கூறுகிறார். //

    அவர் எப்பேர்ப்பட்ட ராம பக்தர் !!!!!!!!

    //நமக்கும் அந்த உயர்ந்த உன்னத பாவனை அருள ஸ்ரீ ராமனை பிரார்த்திப்போம்.
    //

    ஆஹா, பிரார்த்திப்போம். நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள், நன்றிகள்.

    ReplyDelete