Friday, June 28, 2013

பகவான் ரமணரின் சிந்தனைகள்(2)

பகவான் ரமணரின் சிந்தனைகள்(2)








நான் யார்?

இந்த கேள்வியை
ஒருவர்  தனக்குள் கேட்டார் 
விடை தெரிந்ததும் 
பகவான் ரமண மகரிஷி ஆகிவிட்டார். 

அவரை சந்தித்த அனைவர்களிடமும்
அதே கேள்வியை அவர்களுக்குள்
கேட்குமாறு அன்றும் சொன்னார்

இன்றும் அவரை பற்றி நினைப்பவர்களுக்கு
சொல்லிக்கொண்டிருக்கிறார்  .

ஆனால்  அவர் உபதேசத்தை
கேட்பவர்கள்தான்  இல்லை  .

பல தேசங்களிலிருந்து வருகிறார்கள்
அவர் உருவமாய் இருந்து
வாழ்ந்த இடத்தை பார்க்க

ஆனால் அவர் சொல்லியதை
செயல்படுத்த யாரும் முழு மனதுடன்
முயற்சிப்பதில்லை.

அவர் வடிவத்தை
தியானம் செய்கிறார்கள்
அவர் சொல்லிய ஆத்ம
தியானத்தை செய்வதில்லை.

எத்தனை   முறை படித்தாலும்
அவரின் "நான் யார் "என்ற
அவரின் முதல்  உபதேசம்
படிப்பதற்கு  எளிமையாக  இருக்கிறது .
 இனிமையாக  இருக்கிறது
அப்போதே ஞானம்
கிடைத்து விட்டது போல்
ஒரு மகிழ்ச்சி .
ஆனால் நடைமுறையில்
சாத்தியப்படமாட்டேன்  என்கிறது .

அவரை பற்றியும்
அவர் மற்றவர்களோடு  உரையாடிய
 வார்த்தைகளைப்பற்றியும்
 பல ஆயிரக்கணக்கில்
 புத்தகங்கள்  வெளிவந்துவிட்டது.

படிப்பதற்கே நேரம் இல்லை .

இன்னும்  வந்துகொண்டுஇருக்கிறது
படித்து புரிந்து கொள்ளும் சக்தியும் இல்லை.
பொறுமையும் இல்லை

நம்முடைய மனம்
இன்ஸ்டன்ட் காப்பி போல்,
உடனடியாக
ஆத்ம ஞானம் வேண்டும் என்கிறது.

ஆனால் நம்மை ஆட்டிவைத்து
துன்பத்தில் ஆழ்த்தும் அகந்தையை
விடத் தயாரில்லை

முழு மூச்சுடன் நம்பிக்கையுடன்
போராட தயாரில்லை

ஒரு சின்ன அற்ப சுகத்தைக் கூட
தியாகமும் செய்ய தயாரில்லை

,உடலை மறந்து, உள்ளத்தை மறந்து,
 உலகியல் அறிவை ஒதுக்கி வைத்து
,உடைமைகளை ,
உறவுகளின் மீதான  பற்றினை துறந்து
பொறுமையுடனும் சாதனை செய்யாமல்
எப்படி ஆத்ம ஞானம் கிடைக்கும்?

நிச்சயம் கிடைக்காது

அப்படியானால் என்னதான் வழி?

தொடர்ந்து சிந்திப்போம்.

3 comments:

  1. மனதில் உள்ள சந்தேகங்கள் வரிகளாக...

    தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  2. தாங்கள் வரைந்துள்ள படமும், ரமணரின் சிந்தனைகளும் அருமையாக உள்ளன. பாராட்டுக்க்ள்.

    //நம்முடைய மனம் இன்ஸ்டன்ட் காப்பி போல், உடனடியாக ஆத்ம ஞானம் வேண்டும் என்கிறது.//

    ;)))))

    ReplyDelete
    Replies
    1. அதற்க்கு நம் மனம்
      பால் போல்வெண்மையாக
      இருக்கவேண்டும்.

      Delete