Wednesday, June 12, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(70)

தியாகராஜ  சுவாமிகளின் 
சிந்தனைகள்(70)







கருட வாகனனே !
என்னை நோயற்றவனாக செய்வாயாக!

கீர்த்தனை(278)-விராஜதுரக -ராஜ ராஜேஸ்வர-
ராகம்-பலஹம்ச -தாளம்-ஆதி. 

கருட வாகனனே !
மன்னர் மன்னனே!

என்னைநோயற்றவனாக செய்வாயாக .

மூப்பு, மரணம், முதலிய வியாதிகள்
நிறைந்த சரீரத்துடன் கீழ்
மக்கள் எதைத் சாதித்தனர்?

இடைஇடாமல் ஐம்புலன்களால்
ஏற்படும் துக்கமேன்னும் தலைமுறைக்கு
ஆளாகி ,பலவீனமடைந்து
எல்லையற்ற காமத்தின் விளைவாக
மதம் உள்ளத்தை வருத்த
மதி கெட்டவர்களாக ஆகிறார்கள்.

மிக அருமையான கீர்த்தனை
இறைவன் கொடையாக அளித்த இந்த
உடல் அந்த இறைவன் வாழும் ஆலயம்

அதை மனம் போன போக்கெல்லாம் 
தீய வழியில்  சென்று அதை பாழ்படுத்தி 
பிறவியின் நோக்கதை அறிந்துகொள்ளாமல் 
படுகுழியில் விழுந்து நரக வாழ்க்கையை  
அனுபவிக்கக்கூடாது 

அதை  நோய் நொடியில்லாமல் 
நன்றாக பராமரித்து  அதனுள்ளே 
குடிகொண்டுள்ள வாசுதேவனை 
புறத்திலும் அகத்திலும் ஆராதித்து. 
புறத்திலே ஆராவமுதனாக அவன் 
வடிவை தரிசித்து ஆனந்தம் கொண்டு 
அகத்தில் ஆத்மராமனாய் 
ஒளி வீசும் அவனை தியானத்தில்
கண்டு இன்புறவேண்டும். 

அதற்காக பல்வேறு கடுமையான 
சோதனைகளுக்கு இடையேயும்
செயற்கரிய சாதனைகளை செய்து 
தாயின் வருத்தத்தை போக்கியருளியது
மட்டுமல்லாமல் பரந்தாமனின் வாகனமாக 
விளங்கும்  பெரிய திருவடியாம் 
கருடபெருமானை அனுதினமும் 
போற்றி வணங்கி 
நோயில்லா வாழ்வு 
பெற பிரார்த்திப்போம். 

3 comments:

  1. /// இறைவன் கொடையாக அளித்த இந்த உடல் - அந்த இறைவன் வாழும் ஆலயம்... ///

    எப்படியெல்லாம் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம்...?!

    கீர்த்தனை விளக்கங்களுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //பரந்தாமனின் வாகனமாக விளங்கும் பெரிய திருவடியாம் கருடபெருமானை அனுதினமும் போற்றி வணங்கி நோயில்லா வாழ்வு பெற பிரார்த்திப்போம். //

    அருமை. பெரிய திருவடிக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete