Friday, June 28, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (93)

தியாகராஜ  சுவாமிகளின்  
சிந்தனைகள் (93)































இராமா
உன் நாமம் மிகவும் கொடிய 
பாதகங்களை அடியுடன்
ஒழிப்பது 

கீர்த்தனை(135)-பேரிடி நின்னு பெஞ்சிந வாரெவெரெ
ராகம்-கர ஹரப்ரிய -தாளம்-ஆதி 

அனைத்திற்கும் உயர்ந்ததும் சாரமானதுமான
தாரக நாமத்தையே உனக்குப் பெயராக
இட்டு உன்னை வளர்த்தவர்கள்  யாவர்?
அவர்களை எனக்குக் காட்டுவாயாக !

அவர்களிட்ட உனது திருநாமம்
சகல மதங்களுக்கும் சம்மதமானது

மிகவும் கொடிய
பாதகங்களை அடியுடன்
ஒழிப்பது

இத்தியாகராஜன் அனவரதமும்
பஜனை செய்யும் திருமந்திரமும்
அதுவேயாகும்.

இந்த உலகில் பாவம்  செய்யாமல் 
யாரும் இருக்க முடியாது. போதாக்குறைக்கு
முன் ஜன்ம பாவங்கள் வேறு பிறவிதோறும்
நம்மோடு தொடர்ந்து வந்து நம்மை 
வருத்திக்கொண்டிருக்கின்றன

இந்நிலையில் நம்மை 
காப்பாற்றி கரை சேர்க்கும் அருமருந்து
இராம நாமம்தான். அதை விடாது 
பிடித்துகொண்டு கரையேறுவோம். 

4 comments:

  1. நல்ல கீர்த்தனை... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. / நம்மை காப்பாற்றி கரை சேர்க்கும் அருமருந்து இராம நாமம்தான். //

    கேட்கவே ஆனந்தமாக உள்ளது. மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete